கோலி கேப்டன், ரோஹித் ஷர்மா பெஸ்ட் கேப்டன்: கொளுத்திப் போடும் கம்பீர்!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை கோப்பை வென்று கொடுத்த கேப்டனாக ரோஹித் ஷர்மா திகழ்கிறார். பெங்களூர் அணி கேப்டனாக இருக்கும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை ஏந்தியதில்லை.

இதனைத் தொடர்புப் படுத்தி பேசிய இந்திய அணி முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், இந்திய டி20 அணியை வழிநடத்த விராட் கோலியைவிட ரோஹித் ஷர்மாதான் சிறந்தவர் எனத் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசியபோது தெரிவித்தார்.

“விராட் கோலி கேப்டன்ஸியை குறைசொல்ல முடியாது. அதேபோல், ரோஹித் ஷர்மா சிறந்த டி20 கேப்டன் என்பதை மறுக்கமுடியாது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை ஆஸ்திரேலிய தொடருக்குத் தேர்வு செய்ததுபோல், சிறந்த ஐபிஎல் கேப்டனை ஏன் இந்திய அணிக்கு கேப்டனாக்க கூடாது?” என கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் பார்த்திவ் படேல், “உண்மையில், கோலியைவிட ரோஹித் ஷர்மாதான் சிறந்த டி20 கேப்டன்” எனத் தெரிவித்தார்.

சொந்த அணி வீரரே தன்னுடைய கேப்டனை குறைத்து மதிப்பிட்டது ஆர்சிபி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்போது ட்விட்டரில், சிறந்த கேப்டன் ரோஹித்தா, கோலியா? என இருவரின் கடந்த கால செயல்பாடுகளை ஒப்பிட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.

ரோஹித் சர்மா கேப்டன்சியில், மும்பை இந்தியன்ஸ் அணி 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் கூட ரோஹிதை ஒருநாள், டி20 அணிகளுக்கு கேப்டனாக அறிவிக்காதது வெட்கக்கேடு என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், எம்.பியுமான கௌதம் கம்பீர் கூறியுள்ளார். ஈஎஸ்பின் கிரிக் இன்போவில் பேசிய கௌதம் காம்பீர் “ குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித்தை ஏன் தேர்வு செய்யவில்லை? இனியும் அவருக்கு கேப்டன் பொறுப்பை அளிக்கவில்லை என்றால் அது துரதிர்ஷ்டமானது என்று கூறியுள்ளார்.

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி போன்றே ரோஹித் சர்மாவும் சிறந்த கேப்டன். ஒரு கிரிக்கெ வீரரை கேப்டனாக நியமிக்க என்ன அளவுகோல்கள் இருக்கிறது? ரோஹித் சர்மா 5 முறை ஐபிஎல் சாம்பியன்ஷிப்பை அணிக்காக பெற்றுத்தந்துள்ளார். விராட் கோலிக்கும் ரோஹித்திற்கும் கேப்டன் பொறுப்பை பிரித்துக் கொடுப்பதனால் ஒரு கேடும் விளையாது. விராட் கோலியை விட ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா சிறந்த கேப்டனாக விளங்குவார். கேப்டன் பொறுப்பை பெற தகுதியுடையவர்கள் யார் என்பதற்கான அளவுகோல்கள் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் என்றும் கௌதம் காம்பீர் கூறியுள்ளார்.

Be the first to comment on "கோலி கேப்டன், ரோஹித் ஷர்மா பெஸ்ட் கேப்டன்: கொளுத்திப் போடும் கம்பீர்!"

Leave a comment

Your email address will not be published.