கோலியின் ஆக்ரோஷமான விளையாட்டைக் குறித்து புகழ்ந்த – ஷேன் வார்ன்…

www.indcricketnews.com-indian-cricket-news-032

சிட்னி: விராட் கோலி இருக்கும் போது, டெஸ்ட் கிரிக்கெட் சிறப்பான வளர்ச்சி பெறும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் லெஜண்ட் ஷேன் வார்ன் சொல்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான  நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தியா நிர்ணயித்த 368 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து, 210 ரன்களுக்கு அல் அவுட்டாக, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்தியா 2-1 என்று முன்னிலை வகிக்கிறது.   செப்.10 மான்செஸ்டரில் தொடங்கவுள்ள கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வெற்றிப் பெற்றால் தொடரை 2-2 என்று சமன் செய்யும். ஒருவேளை, மீண்டும் இந்தியா வெற்றிப் பெற்றுவிட்டால் 2007ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில், இந்திய அணி மீண்டும் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை பெறும்.

அதுவும் 3-1 என்று இங்கிலாந்து அணியை அவர்கள் மண்ணிலேயே வீழ்த்தி சாதனைப் படைக்கும். இந்த போட்டியில், இங்கிலாந்து டிரா செய்ய வேண்டும் என்ற நோக்கில் விளையாடினால் நிச்சயம் தோல்வியை தவிர்க்கவியலாது. இந்தியாவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று விளையாடினால் தான், கோப்பை இந்தியாவுக்கு செல்வதை தடுக்க இயலும். இதுவரை இல்லாத அளவுக்கு, இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி சிறப்பாக விளையாடுவதற்கு முக்கியமான காரணம், அணி ஒருங்கிணைந்து விளையாடுவதே ஆகும்.

இந்திய அணியில் தொடக்க வீரர்கள் காயம், மிடில் ஆர்டரின் மோசமான ஃபார்ம், பவுலிங்கில் கூட வீரர்களுக்கு காயம் என்று பல சிக்கல்களை  சந்தித்தாலும், இங்கிலாந்தை வீழ்த்திவிட்டது இந்தியா அணி.   இந்நிலையில், விராட் கோலி கேப்டன்சி குறித்து ஆஸ்திரேலியாவின் லெஜண்ட் ஸ்பின்னர் ஷேன் வார்ன் புகழ்ந்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர், ஸ்கை ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில், “கேப்டன் விராட் கோலி அனைத்து வீரர்களின் மரியாதையையும் பெற்றிருக்கிறார்.

அவர்கள் அவரை ஆதரித்து அவருக்காக விளையாடி வருகிறார்கள். ஒரு அணி உங்களுக்காக விளையாடுவது என்பது ஒரு கேப்டனுக்கு மிக முக்கியமான விஷயம் ஆகும். விராட் அணியை நடத்தும் விதத்திற்காக, நாம் அனைவரும், ‘நன்றி விராட்’ தெரிவிக்க வேண்டும். அவர் அணியை வழிநடத்திய விதம், வெற்றிப் பெறுவோம் என்று அவர்களை நம்ப வைத்த விதம் அனைத்தும் சிறப்பான பண்பாக அமைந்துள்ளது.

நம்பிக்கை என்பது விளையாட்டின் ஒரு முக்கிய பகுதி. நீங்கள் வெற்றிப் பெறுவோம் என நம்பவில்லை என்றால், நீங்கள் எவ்வளவு நல்ல அணியாக இருந்தாலும் வெற்றி பெற முடியாது. கோலி தனது அணிக்கு நம்பிக்கையைத் தருகிறார், அதைப் பார்ப்பதற்கு மகிழ்க்கியாக உள்ளது. விராட் கோலி இருக்கும் போது டெஸ்ட் கிரிக்கெட்டின் வளர்ச்சியும் சிறப்பாகவே அமையும். விராட் கோலி மிக நீண்ட காலம் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று  ஷேன் வார்ன் கோலி குறித்து சிறப்பாக கூறியுள்ளார்.

Be the first to comment on "கோலியின் ஆக்ரோஷமான விளையாட்டைக் குறித்து புகழ்ந்த – ஷேன் வார்ன்…"

Leave a comment

Your email address will not be published.


*