கோலிக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் திணறுகிறார்- நாசர் ஹுசைன்

www.indcricketnews.com-indian-cricket-news-103

லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸின் ஹெட்டிங்லே மைதானத்தில் நடந்தது. இதில், இந்திய அணி நான்காவது நாளிலேயே தோல்வியைத் தழுவியது.இதில் ரொம்பவே இக்கட்டில் இருப்பவர் கேப்டன் விராட் கோலி தான்  என்ன செய்வதென்று அவருக்கும் தெரியவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பிறகு, களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 432 ரன்கள் அடித்தார்கள். இந்திய அணி 2வது இன்னிங்ஸில் ஓரளவு சிறப்பாக விளையானார்கள்.

தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, புஜாரா 91 ரன்களும், கேப்டன் விராட் கோலி 55 ரன்கள் எடுத்தனர். இறுதியில், இந்திய அணி 278 ரன்களில் ஆல் அவுட் ஆனது, ஆனால் இங்கிலாந்து  76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்று சமநிலை கொண்டுள்ளது. இந்நிலையில், விராட் கோலியின் பேட்டிங்கில் என்ன பிரச்சனை என்பது குறித்து, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், டெய்லி மெயிலுக்கு தான் எழுதும் கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில், ‘எந்த பந்துகளை தவிர்க்க வேண்டுமோ, அந்த பந்துகளில் எல்லாம் கோலி விளையாடுகிறார். அவரிடம் டெக்னிக்களாக சில பிரச்சனைகள் உள்ளது. அதாவது, பேக் ஃபூட் எடுத்து ஆடுவதில், கால்களை பின்னோக்கி கொண்டு வந்து ஆடுவதில், அதனை சரியான பொசிஷனில் நிலைநிறுத்துவதில்லை.

மேலும் அவர் ஆண்டர்சன் மற்றும் ராபின்சனின் பந்துகளை துல்லியமாக பேக் ஃபூட் எடுத்து ஆடுவதில் சிரமப்படுவதுபோல் உள்ளது. அந்த பந்துகளை விளையாடுவதா அல்லது விடுவதா என்று அவருக்கே தெரியாமல் ஆகிறார்.

இன் ஸ்விங் பந்துகள் வரும் போது, அவருக்கு சுத்தமாக என்ன செய்வதென்றே தெரியவில்லை, இங்கிலாந்து அணியும்  உயர்தர பந்துவீச்சு கொண்டதுள்ளது. எனவே எதிர்வரும் போட்டிகளிலும் அது அவருக்கு எளிதாக அமையாது. அவர் மூன்றாவது நாளில் நன்றாக தான் விளையாடினார்  பழைய பந்துகளை தொடாமல் அவர் எளிதாக   லீவ் செய்து விளையாடினார்.

ஆனால் புதிய பந்தை அப்படி லீவ் செய்வது கடினம், ஏனெனில் புதிய பந்துகள், மெதுவாக தான் ஸ்விங் ஆகும் மற்றும்  நான்காவது நாளில் கோலி தான் எப்போதும் அவுட்டாவது போல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். நாட்டிங்கமில் ஆண்டர்சனுக்கு எதிராக கோல்டன் டக் ஆகி தொடரைத் தொடங்கிய பிறகு, கோலி ஐந்து இன்னிங்ஸ்களில் வெறும் 124 ரன்கள் மட்டுமே அடுத்துள்ளார். ஆவரேஜ் 24.80 அதிகபட்ச ஸ்கோர் 55 அவ்வளவு தான் எடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார் நாசர் ஹீசைன்.

Be the first to comment on "கோலிக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் திணறுகிறார்- நாசர் ஹுசைன்"

Leave a comment

Your email address will not be published.


*