‘கொல்கத்தா அணியில் கொரோனா’ தமிழக வீரருக்கும் பாதிப்பு: நேற்றைய போட்டி ஒத்திவைப்பு

ஐபிஎல் (IPL) 14ஆவது சீசன் நேற்றைய லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிகள் மோதவிருந்த நிலையில், கொல்கத்தா அணியில் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நேற்று நடைபெறவிருந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டி ஒத்து வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வருண் சக்ரவர்த்தி,சந்தீப் வாரியர் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற வீரர்களுக்கு கொரோனா நெகடிவ் என வந்துள்ளது. இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், நேற்று நடைபெறவிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒத்துவைக்கப்படுகிறது. தேதி விரைவில் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

கொல்கத்தா அணி தனது கடைசியாக ஏப்ரல் 29ஆம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியை அகமதாபாத் மைதானத்தில் எதிர்கொண்டது.

தற்போது கொலக்த்தா அணியில் இருவருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அந்த அணியைச் சேர்ந்த பாட் கம்மின்ஸ், பென் கட்டிங்ஸ் இருவரும் அச்சத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இருவரும் விரைவில் தொடரிலிருந்து வெளியேறவும் அதிக வாய்ப்பிருக்கிறது எனவும் தகவல் கசிந்துள்ளது.

இதைத் தொடர்ந்து  சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி மற்றும் சிஎஸ்கே வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஓட்டுனர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சிஎஸ்கே பயிற்சியை ரத்து செய்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் தற்போது தனிமை முகாமிற்கு சென்றுள்ளனர்.

மேலும், டெல்லி மைதான ஊழியர்கள் 5 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களும் தனிமை முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். டெல்லி மைதானத்தில் மே 8 வரை 4 ஐபிஎல் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இங்கு அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் தற்போது தனிமை முகாமிற்கு சென்றுள்ளனர்.

மேலும், டெல்லி மைதான ஊழியர்கள் 5 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களும் தனிமை முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். டெல்லி மைதானத்தில் மே 8 வரை 4 ஐபிஎல் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இங்கு அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (MI), சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் இன்று மோதவுள்ளன.

Be the first to comment on "‘கொல்கத்தா அணியில் கொரோனா’ தமிழக வீரருக்கும் பாதிப்பு: நேற்றைய போட்டி ஒத்திவைப்பு"

Leave a comment

Your email address will not be published.


*