கொல்கத்தாவுக்கு துரோகம் செய்த மும்பை: ஹைதராபாத் மெகா வெற்றி!

ஐபிஎல் 13ஆவது சீசன் கொல்கத்தாவுக்கு துரோகம் செய்த மும்பை: ஹைதராபாத் மெகா வெற்றி!

கடைசி லீக் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னர், விருத்திமான் சஹா இருவரும் சிறப்பாக விளையாடியதால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, பிளே ஆஃப் உறுதி செய்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து ஐந்தாவது இடத்திற்கு நகர்ந்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நான்காவது இடத்தில் நீடிக்கிறது

மும்பை இப்போட்டியில் முழுப் பலத்துடன் களமிறங்கவில்லை. ஜஸ்பரீத் பும்ரா, டிரன்ட் போல்ட், ஹார்திக் பாண்டியா போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால், போட்டி துவக்கம் முதலே ஹைதராபாத் அணிக்குச் சாதகமாகவே இருந்தது. கேப்டன் டேவிட் வார்னர் அற்புதமாக விளையாடி 58 பந்துகளில் 85 ரன்கள் குவித்தும், விருத்திமான் சாஹா நிதானமாக விளையாடி 45 பந்துகளில் 58 ரன்களும் எடுத்தும் அசத்தினர். இதனால், மும்பை அணி பத்து விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

வெள்ளிக்கிழமை அன்று பெங்களூர், ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றில் மோதும். தோல்வியடையும் அணி கோப்பைக்கான போட்டியிலிருந்து விலகிக்கொள்ளும்.

விருத்திமான் சாஹா டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே சிறப்பாக விளையாடுவார், அவரால் டி20 கிரிக்கெட்டில் சோபிக்க முடியாது என்ற கருத்தைப் பொய் என நிரூபித்துள்ளார். வார்னர் சரியான நேரத்தில் பேஸ்டோவை நீக்கி, சாஹாவுக்கு வாய்ப்பு கொடுத்து அணியை பிளே ஆஃப் வரை கூட்டிச் சென்றுள்ளார்.

வார்னர், பேர்ஸ்டோ இருவரும் துவக்கம் முதலே பார்ட்னர்ஷிப்பை வலுப்படுத்தத் துவங்கினர். துவக்கத்தில் நாதன் கோல்டல் நீல் வீசிய ஓவரில் சாஹா சிக்ஸர், பவுண்டரி அடித்து தன்னுடைய பார்மை வெளிக்காட்டினார். அதேபோல் வார்னர், துவக்கத்தில் ஜேம்ஸ் பாட்டின்சன் பந்தைச் சிறப்பாக எதிர்கொண்டு அசத்தினார். அதன்பிறகு இருவரையும் யாராலும் அசைத்துப் பார்க்க முடியவில்லை.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சில் பட்டையக் கிளப்பியது. காயத்திலிருந்து மீண்டு வந்த மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு, சந்தீப் ஷர்மா அற்புதமாகப் பந்துவீசி ஆட்டமிழக்கச் செய்தார். மற்ற பேட்ஸ்மேன்களும் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தாக்குப் பிடிக்கத் திணறினர். இறுதியில் ஹைதராபாத் அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றிபெற்றது.

மும்பை அணியில் பும்ரா, போல்ட், ஹார்திக் பாண்டியா இருந்திருந்தால் நிச்சயம் நெருக்கடி கொடுத்திருக்க முடியும். ஆனால், அவர்கள் இல்லாததால் கொல்கத்தா அணி 5 இடத்திற்கு நகர்ந்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.

Be the first to comment on "கொல்கத்தாவுக்கு துரோகம் செய்த மும்பை: ஹைதராபாத் மெகா வெற்றி!"

Leave a comment

Your email address will not be published.