கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்படுவதாக அறிவிப்பு

வீரர்கள் ஒன்றன் பின் ஒன்றாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் 2021 தொடரை நிறுத்திவைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. கொல்கத்தா வீரர்கள் வருண் சக்கரவர்த்தி சந்தீப் வாரியர், ஐதராபாத் அணி விர்த்திமான் சஹா, டெல்லி அணியின் அமித் மிஷ்ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை பயிற்சியாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வீரர்களை பொறுத்தவரை, இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலியர்கள் மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கு திரும்புவதற்கு நிறைய கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாட்டு வீரர்களும் இதனால் சொந்த நாடுகளுக்கு போக முடியாமல் இருக்கக்கூடிய சூழ்நிலையில் ஏற்கனவே ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் வெளிநாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் முழுமையாக செய்து தருவோம். அச்சப்பட தேவையில்லை என்று கூறியுள்ளனர். வீரர்கள் உடனடியாக தங்களது சொந்த நாடுகளுக்கு செல்ல விரும்புகிறார்கள் என்றால் நிச்சயமாக அதற்கான ஏற்பாடுகளை முழுமையாக செய்து தருவோம் என்று சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் உள்ள நிலையில் வீரர்கள் தொடர்ந்து தங்களது அச்சத்தை தெரிவித்து வருகின்றனர்.

டெல்லியில் போட்டிகளை நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. அங்கு மருத்துவ குறைபாடுகள் உள்ளிட்டவை தொடர்ந்து இருந்து வருவதன் காரணமாக, ஒட்டுமொத்த நாடும் கொரோனாவால் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வரக்கூடிய நிலையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதும் அதில் நாங்கள் பங்கேற்பதும் சரியாக படாது என நிறைய வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அவர்கள் அச்சப்பட்டது போலவே வீரர்களுக்கும் தற்போது கொரோனா வந்துள்ளது. நிர்வாகிகளின் உறவினர்கள் உயிரிழந்திருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் வீரர்களின் அச்சம் இன்னும் அதிகரித்திருக்கிறது. எனவே அனைவரது பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு போட்டிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது,  ஐபிஎல் விதிகளின்படி அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிஎஸ்கே அறிவித்துள்ளது. பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி, வீரர்களுக்கான பயண உதவி அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் முதலில் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ஆனால் இப்போது அவர்கள் ஐபிஎல்லை காலவரையின்றி நிறுத்த முடிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து, கொல்கத்தா, சென்னை, டெல்லி என 3 அணிகளில் உள்ள வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Be the first to comment on "கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்படுவதாக அறிவிப்பு"

Leave a comment

Your email address will not be published.


*