கொரோனாவுக்கு எதிரான போருக்காக நிதியுதவி செய்த யுவராஜ் சிங்!

புதுடெல்லி: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ரூ. 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸுக்கு எதிரான மருத்துவ தேவைகளுக்காக பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். இதில் பிசிசிஐ ரூ. 51 கோடியும் , சுரேஷ் ரெய்னா ரூ. 52 லட்சமும் , சச்சின் ரூ. 50 லட்சமும் வழங்கியுள்ளனர். மேலும் பல இந்திய விளையாட்டு வீரர்களான ஹிமா தாஸ், பிவி சிந்து , கங்குலி, பஜ்ரங் பூனியா ஆகியோரும் தங்களால் முடிந்த உதவிகளை அளித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரின் மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் கொரோனா தாக்குத்துக்கு எதிரான போராட்டத்துக்காக தொகை குறிப்பிடாமல் நிதியுதவி அளித்தனர். ஆனால் அவர்கள் ரூ. 3 கோடி நிதி வழங்கியதாக பாலிவுட் வட்டாரங்கள் தகவல்கள் அளித்தன.

முன்னாள் கேப்டன் அனில் கும்ளே, விராட் கோலி போல தொகை குறிப்பிடாமல் நிதியுதவி அளித்துள்ளனர். மேலும் மக்களும் நிதியுதவி வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இதே போல இந்திய பெண்கள் அணியின் மிதாலி ராஜ் ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.


யுவராஜ் உதவி
இந்த பட்டியலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் இணைந்துள்ளார். இவர் இதற்காக ரூ. 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். அதே போல பிரதமர் வேண்டுகோளின் படி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

Be the first to comment on "கொரோனாவுக்கு எதிரான போருக்காக நிதியுதவி செய்த யுவராஜ் சிங்!"

Leave a comment

Your email address will not be published.


*