கே.எல்.ராகுல் வெளியேறியதால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை ரிஷப் பண்ட் வழிநடத்துகிறார்.

www.indcricketnews.com-indian-cricket-news-10531

மும்பை: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. மேலும் இந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ஜூன் 9ஆம் தேதியான இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இத்தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற இவ்விரு அணிகளும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து தென்னாப்பிரக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில்,கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய படையை பிசிசிஐ உருவாக்கியிருந்தது.

இதனால் சர்வதேச டி20 போட்டியில் தொடர்ச்சியாக 13 வெற்றிகளை பெற்ற இந்திய அணி இந்த முறையும் வெற்றிபெற்று சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் இந்திய அணிக்கு திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை எதிர்கொள்ள இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட கே.எல்.ராகுல் வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது வலது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இத்தொடரிலிருந்து முழுவதுமாக வெளியேறுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதேபோல சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் பேட்டிங் பயிற்சியின் போது வலது கையில் அடிபட்டதால் அவரும் அணியிலிருந்து விலகுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும் இவர்கள் இருவரும் காயம் குணமடைந்த பின் பெங்களூரில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் தங்களது உடல் தகுதியை நிருபிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அகில இந்திய மூத்த தேர்வுக் குழுவானது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டு தொடரில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை கேப்டனாகவும், ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக கோப்பையை வென்றுக்கொடுத்த ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ ட்வீட் செய்துள்ளது.

இந்திய அணி ஏற்கனவே ரோகித் ஷர்மா, விராட் கோலி, பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், அணியின் ஓப்பனிங் தூணாக இருந்த கே.எல்.ராகுலும் இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனால் இந்திய அணிக்கு பேட்டிங்கில் பெரும் பின்னடைவும்,பந்துவீச்சில் சிறிய சரிவும் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த 2 வீரர்கள் விலகியுள்ளதால்,இந்திய அணிக்கு மாற்று வீரர்கள் குறித்து எந்த அறிவுப்பும் வெளியிடப்படவில்லை. ராகுலுக்கு பதிலாக, ருதுராஜ் கெய்க்வாட் இஷான் கிஷானுடன் இந்திய பேட்டிங்கைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால், ஏற்கனவே குல்தீப் யாதவ்க்கு பதிலாக அணியில் அக்சர் பட்டேல், ரவி பிஸ்னாய், சாஹல் என மூன்று வீரர்கள் உள்ளனர். அதேபோல வேகப்பந்துவீச்சாளர்களும் அதிகளவில் உள்ளதால் வீரர்களாக 2 பேட்ஸ்மேன்களை களமிறக்க அதிக வாய்ப்புள்ளது.

Be the first to comment on "கே.எல்.ராகுல் வெளியேறியதால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை ரிஷப் பண்ட் வழிநடத்துகிறார்."

Leave a comment

Your email address will not be published.


*