கிங் கோலியின் அணியை வீழ்த்தும் ஒரே தகுதி இந்த டீமுக்கு தான் இருக்கு!

தற்போதைய விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தும் தகுதியுடன் உள்ள அணி குறித்து பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. இவர் பேஸ்புக் நேரலையில் பேசினார். இதில் வலிமையான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியை வெல்லும் திறமை கொண்ட அணி குறித்து பேசினார்.

இதுகுறித்து சாஸ்திரி கூறுகையில், “கடந்த 1985 இல் இருந்த இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற ஒவ்வொரு வீரரையும் 83 இல் இருந்த அணியை ஒப்பிட்டு பார்க்கையில் 1985 இல் இருந்த அணி தான் மிகவும் பலமான அணியாக இருந்தது. அதற்கு அந்த அணியில் இடம் பெற்ற இளம் வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.

அந்த அணி தற்போதுள்ள இளம் விராட் கோலியின் அணியை கூட வீழ்த்தும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எப்படிப்பட்ட அணியையும் வீழ்த்தும் திறமை கொண்டது அந்த அணி. பலரும் 83 அணி தான் சிறந்த அணி என நினைக்கின்றனர். ஆனால் 1985 இல் கவாஸ்கர் தலைமையில் இருந்த இளம் வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்” என்றார்.

கடந்த 1985 இல் நடந்த பென்ஷன் உலக சம்பியன்ஷிப் தொடரில் தொடர் நாயகன் விருது வென்றார் ரவி சாஸ்திரி. சர்வதேச கிரிக்கெட்டில் ரவி சாஸ்திரி மற்றும் ஜாவித் மியாந்தத்தின் போட்டி இன்றளவும் மோதல் மிகச்சிறந்ததாகவே பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அந்த தொடரில் மிகவும் டஃப் கொடுத்தாகவும் சாஸ்திரி தெரிவித்தார். நியூசிலாந்து அணியில் மிகப்பெரிய ஸ்டார்கள் இல்லை என்றாலும், அந்த அணி மிகச்சிறப்பான அணியாக இருந்ததாகவும், கடினமான அந்த அணியை அரையிறுதியில் வீழ்த்தியதாகவும் சாஸ்திரி தெரிவித்தார்.

Be the first to comment on "கிங் கோலியின் அணியை வீழ்த்தும் ஒரே தகுதி இந்த டீமுக்கு தான் இருக்கு!"

Leave a comment

Your email address will not be published.