காயம் குணமடைந்தப் பிறகு மீண்டும் அணிக்கு திரும்பும் இந்திய ஸ்ரேயாஸ் ஐயர்

www.indcricketnews.com-indian-cricket-news-99

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் ஐயருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தினால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது என அவரே ட்வீட்ல் பதிவிட்டிருந்தார். மார்ச்யில்  முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பீல்ட் செய்த போது அவருக்கு இடது தோள்பட்டையில் அடிபட்டுவிட்டது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு, ஸ்கேன் செய்து பார்க்கையில் அவரது இடது தோள்பட்டை கொஞ்சம் இறங்கி இருப்பது தெரிய வந்தது.இதனால் அந்த தொடரிலிருந்து அவர் விலகிக்கொண்டார். தனது காயத்தினால் 2021 ஐபிஎல்-யில் விளையாட முடியாமல் ஓய்வு எடுத்துக்கொண்டுடிருந்தார். எனவே, ஐபிஎல் தொடரில் இவருக்குப் பதிலாக ரிஷப் பண்ட்டுக்கு டெல்லி கேபிட்டல் அணியின் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால் பலரும், டெல்லியின் அணிக்கு தலைமை ஒரு மைனஸாக இருக்க வாய்ப்புள்ளது எனும் ரீதியில் விமர்சனங்களை முன்வைக்க, சப்தமின்றி தொடரை கேப்டனாக தொடக்கினார் ரிஷப் பண்ட். முதல் போட்டியிலேயே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அதிர்ச்சி பதிலை அன்று அவர் கொடுத்தார்.பிறகு அடுத்தடுத்து வெற்றிகளை வசப்படுத்தியது டெல்லி அணி. கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்படும் வரை 8 போட்டிகளில் 6ல் வென்று, புள்ளிப்பட்டியலில் நம்பர்.1 இடத்தை பிடித்தது டெல்லி கேபிட்டல்ஸ் அணி விமர்சனம் செய்தவர்கள், ஏளனம் செய்தவர்கள் என அனைவருக்கும் பதிலடி தருமாறு தனது திறமையின் மூலம் நிருபித்துக்காட்டியிருக்கிறார்.இந்நிலையில், மீதமுள்ள 31 போட்டிகளும் வரும் செப்டம்பர் மாதம் அமீரகத்தில் தொடங்க உள்ளது. தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி வீரர்கள், டெஸ்ட் தொடர் முடிந்தவுடன், இங்கிலாந்தில் இருந்தபடியே நேராக அமீரகம் வந்து சேர்ந்து, அங்கிருந்தே அவரவர்களின் ஐபிஎல் அணியுடன் இணைந்து கொண்டு பயிற்ச்சியில் ஈடுபடுவார்கள். அதன்படி. டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டும் கேப்டனாக அணியுடன் இணைந்து கொள்வார். இந்நிலையில் காயம் காரணமாக விலகியிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் தான் மீண்டும் டெல்லி அணியில் இணைய உள்ளதாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘என் தோள்பட்டையை குணப்படுத்தும் முறைகள் முழுவதும் முடிந்தது. இன்னும் ஒரு மாதத்தில் முழுமையாக குணமடைந்துவிடுவேன். இதனால், நான் நிச்சயம் அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் களமிறங்குவது நிச்சயம்.ஆனால், கேப்டன் பதவியைப் பற்றி எனக்குத் தெரியவில்லை, அது அணியின் உரிமையாளர்கள் கைகளில் தான் இருக்கிறது. ஆனால் அணி ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது, நாங்கள் இப்போது புள்ளிப்பட்டியலில் மேலே இருக்கிறோம், அதுதான் எனக்கு மிகவும் சிறப்பான செய்தி. டெல்லி இதற்கு முன்பு ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை  எனவே, கோப்பையை  வெல்ல வைப்பதே எனது ஒரே குறிக்கோளாகும் என்று கூறியிருக்கிறார் ஷ்ரேயாஸ் ஐயர்.

Be the first to comment on "காயம் குணமடைந்தப் பிறகு மீண்டும் அணிக்கு திரும்பும் இந்திய ஸ்ரேயாஸ் ஐயர்"

Leave a comment