கழுத்தின் மேல் கத்தி தொங்குகிறது : 3வது டெஸ்டில் மூத்த பேட்டருக்கு ஹர்பஜன் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-026

நியூ டெல்லி: இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியும்,இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியும் வெற்றிபெற்று 1-1 என சமநிலையில உள்ளது.

இந்நிலையில், மூத்த வீரர்களை குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்  கூறியதாவது, “டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் அஜிங்கியா ரஹானேவின் லீன் பேட்ச் தொடர்ந்தது, ஏனெனில் முதல் இன்னிங்ஸில் கோல்டன் டக்அவுட் ஆனார். இருப்பினும்,இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி 78 பந்தில் 58 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 240 ரன்கள் இலக்கை நிர்ணயிக்க இந்தியாவுக்கு பெரிதும் உதவினார்.

ஆகையால், கேப்டவுனில் நடைபெறவிருக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் ரஹானேவுக்கு அணி நிர்வாகம் ஆதரவளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது யூடியூப் சேனலில் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட ஹர்பஜன் இதுகுறித்து கூறுகையில், “ஜோகன்ஸ்பர்க் டெஸ்டில் நடந்த நல்ல விஷயம் என்னவென்றால், இரண்டாவது இன்னிங்ஸில் ரஹானே பேட்டிங்கில் ஸ்கோர் செய்தது தான்.

 இதைக்காரணமாக கொண்டு கேப்டவுனில் ரஹானேவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் மேல் முதுகில் பிடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கோஹ்லிக்கு இரண்டாவது டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹனுமா விஹாரி களமிறக்கப்பட்டார். அந்த டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து  மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் விளையாட மீண்டும் அணிக்கு திரும்பும் விராட் கோலிக்கு பதிலாக ரஹானேவை மாற்ற விரும்பவில்லை என்றும், விராட் கோலி உள்ளே வருவதும்,  ரஹானேவை உட்கார வைப்பதும் நடக்கக்கூடாது,” என்றார்.

இதைத்தொடர்ந்து,இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் வெறும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு, இரண்டாவது இன்னிங்ஸில் 86 பந்துகளில் 53  ரன்களுடன் அரை சதம் அடித்த சேத்தேஸ்வர் புஜாராவின் பேட்டிங்கிலும் ஹர்பஜன் ஈர்க்கப்பட்டார்.

இதனால், இருவரின் மறுபிரவேச உணர்வைப் பாராட்டிய ஹர்பஜன் சிங், “ரஹானே மற்றும் புஜாரா இருவரின் கழுத்தின் மேல் கத்தி தொங்குகிறது. அதை நன்கு உணர்ந்து இருவரும் பொறுப்புடன் பேட்டிங் செய்தனர். இருவருமே அபாரமான வீரர்கள்,  நீண்ட காலமாக இந்திய அணியில் விளையாடி நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொண்டவர்கள்.கடந்த சீசனில் இருவரும் சிறப்பாக விளையாடாவிட்டாலும், இனி வரும் தொடர்களில் இருவரின் அரைசதங்கள் சதங்களாக மாற வேண்டும், பெரிய அளவில் ரன்களை குவிக்க வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்தார். 

மேலும், ஒரு வீரர் ஃபார்மில் இல்லாதபோது நிறைய அழுத்தம் இருக்கும் என்று எனக்குத் தெரியும், அப்படிப்பட்ட சூழலிலும் இருவரும் நன்றாக விளையாடி  இருக்கிறீர்கள் என்றால் அது பாராட்டுக்குறியது” என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.