கபில் தேவ்-ன் 41 வருட சாதனையை முறியடித்து வரலாற்று சாதனை படைத்த ஜஸ்பிரித் பும்ரா…

www.indcricketnews.com-indian-cricket-news-028

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் முன்னாள் வீரர் கபில் தேவின் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா வீழ்ந்தியுள்ளார்.  இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை எட்டியது.   முதல் இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணியை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்து வெற்றிக்கு வழிவகுத்தவர்களில் ஜஸ்பிரித் பும்ரா முக்கியமானவர் ஆவார். 4வது டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்ஸில் 191 ரன்கள் அடித்த இந்திய அணி, இங்கிலாந்தை விட 101 ரன்கள் பின் தங்கியிருந்தது.

இதனையடுத்து 2வது இன்னிங்ஸில் கம்பேக் கொடுத்து 466 ரன்களை சேர்த்தது. இதனால் 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றியடைந்தது. ஓவல் மைதானத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இந்திய அணி பெறும் முதல் டெஸ்ட் வெற்றியாகும் இது. அவர் நேற்றைய போட்டியின் போது புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அதாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பவுலர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.  முன்னாள் வீரர் கபில் தேவ் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் இருந்து வந்தார்.

ஆனால் இவரின் சாதனையை யாராலும் முறியடிக்க இதுவரை தொடக் கூட முடியவில்லை ஆனால் ஜஸ்பிரித் பும்ரா தற்போது 24 போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை எடுத்து புதிய சாதனையை பதிவு செய்திருக்கிறார்.  இந்திய அணியில் தவிர்க்க முடியாத வேகப்பந்துவீச்சாளராக வலம் வந்துக்கொண்டிருக்கும் ஜஸ்பிரித் பும்ரா, கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தாமல் விளையாடினார்.

இதனால் பும்ரா மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வந்தன. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதற்கு பதிலடி கொடுத்தார் பும்ரா. முதல் டெஸ்ட் போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி தன்னை மீண்டும் நிரூபித்து காட்டினார். இதன் பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முக்கியமான 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 3வது டெஸ்டில் 2 விக்கெட்டுகளும், 4வது டெஸ்டில் 4 விக்கெட்டுகளும் எடுத்தார். இதனால் இந்த தொடரில் இதுவரை 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது புதிய சாதனைக்காக பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றன

Be the first to comment on "கபில் தேவ்-ன் 41 வருட சாதனையை முறியடித்து வரலாற்று சாதனை படைத்த ஜஸ்பிரித் பும்ரா…"

Leave a comment

Your email address will not be published.


*