இந்த
போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் 10 அணிகள் நேரடியாக
விளையாடும். மீதியுள்ள 6 நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.
இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,
வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகள் நேரடியாக தகுதி
பெற்றுள்ளன. இதில் இலங்கை, வங்காளதேசம் தவிர மற்ற 8 அணிகளும் நேரடியாக 2-வது
சுற்றில் விளையாடும்.
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் துபாய் மற்றும்
அபுதாபியில் நடைபெற்று வருகின்றன. இதில் 14 அணிகள் பங்கேற்றன. இதிலிருந்து 6
நாடுகள் தகுதி பெறும்.
பப்புவா நியூகினியா, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா ஆகிய 4 நாடுகள் உலக கோப்பை
போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தின் மூலம்
ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய
அணிகளும் உலக கோப்பை போட்டிக்கு நுழைந்தன. கடைசி இரண்டு அணிகளாக இந்த அணிகள்
தேர்வு பெற்றன.
ஆங்காங்குக்கு எதிரான போட்டியில் ஓமன் 12 ரன் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. இதன்
மூலம் ஓமன் அணி தகுதி பெற்றது.
துபாயில் நமிபியா அணியை எதிர்த்து ஓமன் அணி மோதியது. இதில் முதலில் பேட் செய்த
நமிபியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. 162 ரன்கள்
சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணி 19.1 ஓவர்களில் 107
ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்து.
டி20 உலகக்கோப்பைப் போட்டிக்கு முதல் முறையாக நமிபியா அணி தகுதிபெற்றுள்ளது. நமிபியா அணியின் ஆல்ரவுண்டர் ஸ்மித் 25 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.
2020-ம் ஆண்டு நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடருக்கு முதல் முறையாக நமீபியா அணி தகுதி பெற்றுள்ளது. நெதர்லாந்து அணியும் தகுதிச்சுற்றுமூலம் நுழைந்துள்ளது.
நேரடியாக போட்டியை நடத்தும் ஆஸ்திரேலயா அணி தகுதிபெற்றுள்ளது.
ஹாங்காங் அணியுடனான போட்டியில் வென்றால் ஓமன் அணி டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க முடியும்.
உலகக் கோப்பைக்கு ஏற்கனவே தகுதி பெற்ற அயர்லாந்து அணியுடன் நெதர்லாந்து அணி அரையிறுதியில் மோத உள்ளது. அதேசமயம், ஸ்காட்லாந்து அணியுடனான ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணி வென்றால் மட்டுமே அந்தஅணிக்கு தகுதிபெற முடியும் இல்லாவிட்டால் போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய நிலைஏற்படும்.
Be the first to comment on "ஓமன் அணியும் பங்கேற்கிறது 20 ஓவர் T20 உலக கோப்பைக்கு"