ஒவ்வொரு முறையும் புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்துகிறார் என்று இளம் இந்திய வீரரைப் பாராட்டிய டெண்டுல்கர்.

www.indcricketnews.com-indian-cricket-news-0101

மும்பை: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இதில், வரும் டிசம்பர் 26ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான தொடரை பொறுத்தவரை பேட்டிங்கை விட பந்துவீச்சு தான் மிகவும் முக்கியமான ஒன்று.  அதனால்,இந்திய அணி குறைந்தது 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளது. ஏனெனில், அங்குள்ள பிட்ச்-கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் முகமது ஷமி, பும்ரா ஆகியோர் முதன்மை வீரர்களாக தேர்வாகியுள்ளனர்.

இந்நிலையில் ,முகமது சிராஜுக்கு 3வது பவுலராக வாய்ப்பு கிடைக்கவுள்ளது. இதில், சீனியர் வீரரான இஷாந்த் ஷர்மா இருக்கும் போது முகமது சிராஜ் தேர்வு செய்யப்படவுள்ளார். ஏனெனில், கடந்த சில தொடர்களில் சிராஜின் ஃபார்ம் மிகவும் சிறப்பாக உள்ளது.சிராஜ், பும்ரா – ஷமியுடன் இணைந்து  விளையாடினால் நிச்சயம் பிற்காலத்தில் முன்னணி வீரராக இருப்பார் எனக்கூறப்படுகிறது.

மேலும், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒரு கிரிக்கெட் வீரரைப் பற்றி நன்றாகப் பேசினால், அது அந்த வீரருக்கு மறக்க முடியாத பாராட்டுக்களாக மாறிவிடும். அந்த வகையில்,ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விஷயத்தை அறிமுகம் செய்வதாக 27 வயதான இளம் கிரிக்கெட் வீரர் முகமது சிராஜை பார்த்து சச்சினே வியப்படைந்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில்,”சிராஜின் கால்களில் ஸ்ப்ரிங் உள்ளதாக நான் நினைக்கிறேன்.

ஏனென்றால், அவருடைய முழு திறணும் அப்படிபட்ட வேகத்தில் தான் இருக்கும். சிறந்த பந்துவீச்சாளர்களில் அவரும் ஒருவர். அவரை பார்த்தால், இது நாளின் முதல் ஓவரா அல்லது கடைசி ஓவரா என்பதே தெரியாத அளவுக்கு அவருடைய பந்துவீச்சு இருக்கும். அவருடைய பந்துவீச்சும் அவருடைய உடல் மொழியும் நேர்மறையானது.அதுதான் அவரிடம் ரொம்ப பிடிக்கும்.எப்போதும் ஒரே மாதிரியான புத்துணர்ச்சியுடன் நல்ல நம்பிக்கையுடன் அவர் இருப்பதாக நினைக்கிறேன்”.இவ்வாறு அவரை பாராட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் தொடரில் சிராஜ் அறிமுகமானார். அப்போது அவர் முதல் போட்டியில் தான் விளையாடுகிறாரா என்கின்ற சந்தேகம் எழும் அளவிற்கு பந்துவீசினார். அவ்வளவு கட்சிதமாக கையாண்டு வித்தியாசமான முறைகளில் லெந்த்களை மாற்றி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை கொடுப்பது அவ்வளவு அழகாக இருக்கும்.

இதன் மூலம் அவரிடம் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற நினைப்பு அதிகம் உள்ளது என்பதை நாம் தெரிந்துக்கொள்ளலாம். மேலும், நான் ஒவ்வொரு முறை அவரை பார்க்கும் போதும் எதாவது புது புது விஷயங்களை செய்துக்கொண்டே இருப்பார் என மூத்த விளையாட்டு பத்திரிகையாளர் போரியா மஜும்தாரிடம் ‘பேக்ஸ்டேஜ் வித் போரியா’ நிகழ்ச்சியில் சச்சின் பாராட்டி கூறினார்