ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்காக இந்த லெக் ஸ்பின்னர் மீது பிசிசிஐ ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்று சவுரவ் கங்குலி விரும்புகிறார்

www.indcricketnews.com-indian-cricket-news-10034863

நியூ டெல்லி: கடைசியாக 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலக்ககோப்பை தொடரில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இருப்பினும் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதிச்சுற்று வரை தகுதிபெற்ற இந்திய அணி கோப்பையை தவறவிட்டது.

அதன்பிறகு ஐசிசி உலகக்கோப்பை தொடர்களில் அரையிறுதி வரை மட்டுமே முன்னேறிய இந்திய அணி, இன்றுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை. இந்நிலையில் நடப்பாண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின்  இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

ஆனால் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரைப் பொறுத்தவரை 2011ஆம் ஆண்டுமுதல், தொடரை நடத்தும் நாடுகள்தான் கோப்பையை வென்றிருக்கிறது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இந்தியாவும், 2016-ல் ஆஸ்திரேலியாவும், 2019-ல் இங்கிலாந்தும் தனது சொந்த நாட்டில் ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்றிருக்கிறது. எனவே நடப்பாண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளதால், இம்முறை இந்திய அணிதான் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், தற்போது 2023ஆம் ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் அட்டவணை வெளியாகியுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் யார் இடம்பெறலாம், கோப்பையை வெல்ல இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் என பலர் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக , முன்னாள் இந்திய கேப்டனும், முன்னாள் பிசிசிஐ  தலைவருமான சௌரவ் கங்குலி இதுகுறித்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள கங்குலி இதுகுறித்து பேசுகையில், ”உலகக் கோப்பையில் வெற்றிபெற, லெக் ஸ்பின்னர்களின் தயவை இந்திய அணி பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இருப்பினும் யுஸ்வேந்திர சாஹல் போன்ற வீரர்களை உலகக் கோப்பை தொடர்களில் புறக்கணிக்கிறார்கள். ஆனால் சாஹல் டி20, ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே சஹல் மீது ஒரு கண்ணை வையுங்கள். அவருக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ் ஆகியோர் உள்ளனர். ஆனால் யுஸ்வேந்திரா சாஹல் மட்டும் எப்படியோ பெரிய போட்டிகளைத் தவறவிடுகிறார். அவர் 20-ஓவர் அல்லது 50-ஓவர் என எதுவாக இருந்தாலும், குறுகிய வடிவங்களில் மிகவும் சீராக செயல்படுகிறார். அவரை கண்காணிக்க வேண்டியது ரொம்ப முக்கியம். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக விளையாடும்போது லெக் ஸ்பின்னர் நிச்சயம் தேவை. ஏனெனில் கடந்த 2011ஆம் ஆண்டு பியூஷ் சாவ்லாவை பயன்படுத்தி, தோனி அந்த பணியை செய்தார்.

 2007ஆம் ஆண்டு நாங்கள் தென்னாப்பிரிக்கா சென்றபோது, ​​வேகப்பந்து வீச்சாளர்களுடன் லெக் ஸ்பின்னர்களையும் வைத்திருந்தோம். ஹர்பஜன் சிங் இடம்பெற்றிருந்த அந்த அணியில் லெக் ஸ்பின்னர்கள் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டனர். எனவே இந்தியா போன்ற ஆடுகளங்களில் லெக் ஸ்பின்னர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்” இவ்வாறு கங்குலி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்காக இந்த லெக் ஸ்பின்னர் மீது பிசிசிஐ ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்று சவுரவ் கங்குலி விரும்புகிறார்"

Leave a comment

Your email address will not be published.


*