ஐ.பி.எல்., ‘லெவன்’ அணியில் தோனி: வாசிம் ஜாபர் தேர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இந்திய அணிக்கு வெற்றிக்கேப்டனாக ஜொலித்த தோனி தலைமையில் இந்திய அணி மூன்று உலக கோப்பைகளை (டி–20 (2007 ), ஒருநாள் (2011), மினி உலகக்கோப்பை (2013, சாம்பியன்ஸ் டிராபி)) வென்றுள்ளது. இதற்கிடையில் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இவர் தவித்து வருகிறார்.



ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க தோனி தீவிரம் காட்டினார். இதற்கு 13ஆவது ஐபிஎல் தொடரில் சாதித்தால் உலகக்கோப்பை தொடர் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தோனி இருந்தார். ஆனால் கொரோனாவைரஸ் தொற்றால் ஐபிஎல் தொடர் மார்ச் 29ஆம் தேதியில் இருந்து வரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தேதியிலும் ஐபிஎல் தொடரை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வாய்ப்பு இல்லை
இதனால் தோனியின் சர்வதேச ரீஎண்ட்ரியும் எதிர்கால கிரிக்கெட் வாழ்வும் மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. ஒருவேளை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரத்தானால் தோனி இனி சர்வதேச அணிக்கு மீண்டும் திரும்பவே முடியாது என பலர் கருத்து தெரிவிக்க துவங்கியுள்ளனர். இந்நிலையில்  முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் தேர்வு செய்துள்ள ஐ.பி.எல்., ‘லெவன்’ அணிக்கு கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 13வது ஐ.பி.எல்., சீசன் ஒத்திவைக்கப்பட்டது. தற்போதுள்ள நிலையில் தொடர் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர், இதுவரை நடத்த ஐ.பி.எல்., தொடர்களில் வீரர்களின் செயல்பாட்டை அடிப்படையாக கொண்டு ‘லெவன்’ அணி ஒன்றை தேர்வு செய்தார். இதில் 7 இந்திய வீரர்கள், 4 வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார்.

‘லெவன்’ அணி: தோனி (கேப்டன்), விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, ரெய்னா, ஹர்திக் பாண்ட்யா, அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, கிறிஸ் கெய்ல், ஆன்ட்ரி ரசல், லசித் மலிங்கா, ரஷித் கான். 12வது வீரர்: ரவிந்திர ஜடேஜா.

Be the first to comment on "ஐ.பி.எல்., ‘லெவன்’ அணியில் தோனி: வாசிம் ஜாபர் தேர்வு"

Leave a comment

Your email address will not be published.


*