ஐ.சி.சி.யின் புதிய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் தேர்வு

ஐ.சி.சி. புதிய தலைவர் தேர்தல் குறித்து பலமுறை ஆலோசனை நடத்தப்பட்டாலும் ஒருமித்த முடிவு எடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடந்த அக்டோபர் 18-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் கிரிக்கெட் சங்க தலைவரும், இடைக்கால தலைவராக இருந்த இம்ரான் கவாஜா, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனர் கிரேக் பார்கிளே ஆகியோர் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர்.

இதையடுத்து ஐ.சி.சி.யின் புதிய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த வக்கீலான கிரேக் பார்கிளே தேர்வானார். அவர் 2012-ம் ஆண்டு முதல் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனராக உள்ளார். கிரேக் பார்கிளேவுக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் ஆதரவாக இருந்தன. 2-வது சுற்றில் தென்ஆப்பிரிக்கா அளித்த வாக்கு அவரது வெற்றியை உறுதி செய்தது. இம்ரான் கவாஜாவுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு கரம் நீட்டின.

புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கிரேக் பார்கிளே கூறியதாவது:-

ஐ.சி.சி.யின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை கவுரவமாக கருதுகிறேன். எனக்கு ஆதரவு அளித்த சக டைரக்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த நெருக்கடியான கொரோனா காலத்தில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து வலுவான வளர்ச்சியை நோக்கி கிரிக்கெட் ஆட்டத்தை கொண்டு செல்ல முடியும் என்று நம்புகிறேன். எனது பதவியை ஒரு பாதுகாவலராக கருதி 104 ஐ.சி.சி.

2020-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த ஆண்கள் 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 2021-ம் ஆண்டில் நியூசிலாந்தில் நடக்க இருந்த பெண்கள் ஒருநாள் உலக கோப்பை போட்டி ஆகியவை 2022-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதேபோல் 2023-ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற வேண்டிய ஒருநாள் உலக கோப்பை போட்டி சில மாதங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த போட்டிகளை எல்லாம் டெலிவிஷன் ஒளிபரப்பு நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்த காலத்துக்குள் நடத்தப்பட வேண்டும். இதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இல்லையெனில் ஒளிபரப்பு நிறுவனங்கள் நமக்கு அபராதம் விதிக்கக்கூடும். இதன் மூலம் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும். இந்த போட்டிகள் மூலம் கிடைக்கும் வருவாயை தான் உறுப்பு நாடுகளின் திட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும்.

உலக போட்டிகளை விட இரு நாடுகளுக்கு இடையிலான போட்டி தொடருக்கு தான் நான் ஆதரவானவன் என்று கூறுவது தவறானதாகும். இருநாடுகள் இடையிலான போட்டி தொடர் என்பது எல்லா நாட்டு கிரிக்கெட்டுக்கும் உயிரோட்டம் போன்றதாகும் என்று கூறினார்.

Be the first to comment on "ஐ.சி.சி.யின் புதிய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் தேர்வு"

Leave a comment

Your email address will not be published.