ஐபில் 2021: கே.எல் ராகுலின் சிறப்பான ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்தவில்லை- கௌவுதம் கம்பீர் கூறுகிறார்…

www.indcricketnews.com-indian-cricket-news-047

புதுடெல்லி: இரண்டு முறை ஐபிஎல் வென்ற முன்னாள் கேப்டன் கௌதம் கம்பீர், பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல் ராகுல் ஐபிஎல் யின் ஒவ்வொரு பருவ விளையாட்டிலும் “2 – 3” சதங்கள் அடிக்கக்கூடிய திறமையைக் கொண்டுள்ளார் என ஸ்டார் ஸ்போர்டஸ் ஷோ வில் அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் 2016-ம் ஆண்டில் விராட் கோலி ஐபிஎல்-ல் 973 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்தது போன்று இவராலும் சாதிக்க முடியும். கேப்டன் ராகுல் இந்த ஆண்டில் ஏழு போட்டிகளுக்குப் பிறகு சராசரியாக 66 ஆக உள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 136 ஆக இருந்தது பின்பு மே மாதத்தில் ஐபிஎல் கொரோனா காரணமாகத் தடைப்பட்டது.

இத்தொடரில் அவர் ரன்கள் பெற்றுள்ளார் ஆனால் அவரின் சிறந்த ஆட்டத்தை இதுவரை உலகம் பார்க்கவில்லை.  பேட்டிங்கில் என்ன சாதிக்க முடியும் என்பதை இன்னும் அவர் வெளிப்படுத்தவில்லை எனக் கூறியுள்ளார்.

29 வயதா  ராகுல் இந்த ஆண்டு ஏழு ஆட்டங்களில் இருந்து 4 அரைசதங்கள் உட்பட 331 ரன்கள் குவித்துள்ளார்.

2021 ல் ஐபிஎல்-ல் அதிக மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஆனால் அவரால் இதற்கு மேலும் ரன்கள் அடிக்க இயலும் என அவர் மீது நம்பிக்கை வைத்துக்கூறியுள்ளார். மேலும் அது நடக்கும் என்று எதிர்பார்க்கிறார். மேலும் மற்ற அணிகள் பற்றி பேசிய கெளதம், தற்போதைய சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் சுற்றுச்சூழல் சாதகமாக இருக்கும் என்றார்.

ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ள முதல் போட்டியில் மும்மை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதவுள்ளன.  மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற மீதமுள்ள ஏழு போட்டிகளில் ஐந்தில் வெல்ல வேண்டும் என்பதால் தொடக்கத்திலேயே ஒரு வேகம் இருக்க வேண்டுமென கருதுகிறார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் பற்றி கூறுகையில் அவர்கள் பல்வேறு சவால்களுடன் போட்டிக்கு வருகிறார்கள் என்றார்.

அவர்கள் நேரடியாக போட்டியில் வந்து விளையாடுவார்கள் எனவே அதற்கான ப்ளானுடன் அவர்கள் விளையாட வேண்டும். விராட் கோலியும் இதை மிக விரைவாக சரி செய்ய வேண்டும் ஏனெனில் அவர் பயிற்ச்சி செய்ய எந்த நேரமும் கிடையாது எனவே வரவிருக்கும் போட்டிகளில் வென்று பிளேஆஃப் க்கு செல்ல இன்னும் கடின உழைப்பு போடவேண்டும் என்று  கூறியுள்ளார் கம்பீர்.

Be the first to comment on "ஐபில் 2021: கே.எல் ராகுலின் சிறப்பான ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்தவில்லை- கௌவுதம் கம்பீர் கூறுகிறார்…"

Leave a comment