ஐபிஎல் 2022: 12 ரன்கள் வித்தியாசத்தில் ஐந்தாவது முறையாக தோல்வியை தழுவிய மும்பை அணி

www.indcricketnews.com-indian-cricket-news-0055

மும்பை: ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி  பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதனைத்தொடர்ந்து பேட்டிங்செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மயங்க் அகர்வால்-ஷிகர் தவன் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். இதில் 6பவுண்டரி, 2சிக்ஸர் விளாசிய மயங்க் 52(32) ரன்களுடன் முருகன்அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேர்ஸ்டோ 12(13) ரன்களுக்கு உனத்கட் பந்துவீச்சில் வெளியேற, அடுத்த ஓவரிலேயே அதிரடி ஆட்டக்காரர் லிவிங்ஸ்டோன் 2(3) ரன்களுடன் பும்ரா பந்துவீச்சில் க்ளின் போல்டானார். ஆனால் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஷிகர் தவன் அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தார். இருப்பினும் 5பவுண்டரி,2சிக்ஸர் உட்பட 70(50) ரன்களுடன் பாசில் தாம்பி பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ஷாருக்கானும் 15(6) அவருடைய பந்துவீச்சிலேயே நடையைக்கட்டினார்.

இதனால் 20 ஓவருக்கு 5 விக்கெட் இழந்த பஞ்சாப் அணி 198 ரன்களை எடுத்தது. இதில் அதிரடியாக விளையாடி 2பவுண்டரி,2சிக்ஸர் விளாசிய ஜிதேஷ் ஷர்மா 30(15) ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். இதனையடுத்து இலக்கைத் துரத்தக் கொண்டு களமிறங்கிய மும்பை அணயின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா-இஷான் கிஷன் ஜோடி அதிருப்தியை ஏற்படுத்தினர். ஏனெனில்  3பவுண்டரி, 2சிக்ஸர் அடித்த ரோஹித் 28(17) ரன்களுடன் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே இஷான் 3(6) ரன்களுக்கு அரோரா பந்துவீச்சில் வெளியேறினார்.

இதனைத்தொடர்ந்து திலக் வர்மா-பிரேவிஸ் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்தனர். குறிப்பாக ராகுல் சஹார் வீசிய 9வது ஓவரில் 4சிக்ஸர், 1பவுண்டரி விளாசிய பிரேவிஸ் 29 ரன்களை குவித்து மும்பையை ஆட்டத்திற்குள் கொண்டுவந்தார். ஆனால் 11வது ஓவரில் பிரேவிஸ் 4பவுண்டரி, 5சிக்ஸர் உட்பட 49(25) ரன்களுடன் ஸ்மித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் விளையாடி 4சிக்ஸர் விளாசிய திலக் வர்மா 36(26) ரன்களுக்கு தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து  பொல்லார்டும் 10(11) ரன்களுடனும் ரன் அவுட்டானதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இருப்பினும்  இறுதியில் தனியொரு ஆளாக நின்று சூர்யகுமார் யாதவ் 1பவுண்டரி, 4சிக்சர்களை பறக்கவிட்டு 43(30) ரன்கள் குவித்தார். இருப்பினும் ரபாடா வீசிய 19வது ஓவரில் ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தார்.

இந்நிலையில் கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டபோது உனத்கட் சிக்சர் அடித்ததால், ஆட்டத்தில் டிவிஸ்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் உனத்கட் 12(7) ரன்களுடன் ஸ்மித் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த  பும்ரா 0(1), டைம் மில்ஸ் 0(2) என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்ததால், 20 ஓவருக்கு 9 விக்கெட் இழந்த மும்பை அணி 186 ரன்கள் அடித்து 12 ரன்கள் வித்தியாசத்தில்  தோல்வியடைந்தது.

Be the first to comment on "ஐபிஎல் 2022: 12 ரன்கள் வித்தியாசத்தில் ஐந்தாவது முறையாக தோல்வியை தழுவிய மும்பை அணி"

Leave a comment

Your email address will not be published.


*