ஐபிஎல் 2022: ரிக்கி பாண்டிங்குடன் பழகுவது பெரிய சாதனையாக இருக்கும் என்கிறார் யாஷ் துல்

www.indcricketnews.com-indian-cricket-news-075

நியூ டெல்லி: ஐபிஎல் 2022ல் மும்பை இந்தியன்ஸ் வரும் மார்ச் 27ஆம் தேதியன்று டெல்லி கேப்பிடல்ஸை எதிர்கொள்கிறது. அதற்குமுன்னதாக ,19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற கேப்டன் யாஷ் துல், இளம் வீரர்கள் விக்கி ஆஸ்ட்வால் மற்றும் அஷ்வின் ஹெப்பர் ஆகியோருடன் இணைந்து கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மும்பையில் உள்ள ஐபிஎல் உரிமையாளரின் பயிற்சி முகாமில் தங்கள் முதல்பயணத்தை மேற்கொண்டனர்.

இதில் டெல்லி கேபிடல்ஸால் தேர்ந்தெடுக்கப்பட்ட யாஷ் துல், அந்த அணியின் உரிமையுடன் இதுவரை தனக்கு இருந்த அனுபவம் குறித்து கூறுகையில், “ஐபிஎல்லில் விளையாடவிருப்பது இதுதான் முதல்முறை.நான் செய்யும் எல்லாவற்றிலும்  எனது 100 சதவீதத்தை வழங்குகிறேன். ரிஷப் பையா(பந்த்) மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருடன் தொடர்புகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அதிலும் குறிப்பாக டெல்லி கேப்பிடல்ஸ்-ன் தலைமைப்பயிற்சியாளரும் , முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனுமான ரிக்கி பாண்டிங்கை சந்திப்பதில் மிக ஆவலாக உள்ளேன். ஏனெனில் அவரொரு சிறந்த வீரர் மட்டுமல்ல சிறந்த மனிதர். எனவே அவருடன் பழகுவதே எனக்கு பெரிய சாதனையாக இருக்கும்.” என்று உரிமையாளரால் வெளியிடப்பட்ட ஊடக வெளியீட்டில் 19 வயதான யாஷ் கூறினார்.

இதற்கிடையில் மஹாராஷ்ட்ராவின் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் விக்கி ஆஸ்ட்வால் டெல்லி கேப்பிட்டல்ஸ் உடனான தனது முதல்பயிற்சி குறித்து கூறுகையில், “ஐபிஎல் தொடரை டிவியில் பார்ப்பது முதல் அதே ஐபிஎல்-ல் விளையாடும் உரிமையை பெறுவது வரை எனக்கு ஒரு பெரிய பயணம். அணியில் உள்ள மற்ற வீரர்கள் மற்றும் பயிற்சி குழு உறுப்பினர்கள் அனைவரையும் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ” என்று தெரிவித்தார்.

மேலும் இந்திய ஆல்-ரவுண்டர் அக்சர் படேலிடமிருந்து உதவிக்குறிப்புகளைப் பெற ஆர்வமாக உள்ளதாகக் கூறிய ஆஸ்ட்வால் இதுகுறித்து கூறுகையில், “நான் கூடிய விரைவில் அக்சர் படேலை சந்திக்க விரும்புகிறேன். ஏனெனில் இடதுகை சுழற்பந்துவீச்சாளராக இருந்ததால், அவர் எனக்கு உத்வேகமாக இருந்துவருகிறார். குறிப்பாக நான் டி20 போட்டிகளில் எப்படி பந்துவீச வேண்டும் என்பது குறித்து அவரிடமிருந்து டிப்ஸ் எடுக்க விரும்புகிறேன். மேலும் ரிக்கி பாண்டிங் மற்றும் பிரவின் ஆம்ரே ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவது நன்றாக இருப்பது மட்டுமின்றி இந்த நபர்களைச் சுற்றி இருப்பது எனக்கு மிகவும் பெருமையான தருணம்.” என்று ஆஸ்ட்வால் கூறினார்.

 தனது முதல் பயிற்சியை முடித்த விதத்தில் மிகவும் மகிழ்ச்சியடைந்த பேட்ஸ்மேன் அஷ்வின் ஹெப்பர் இதுகுறித்து கூறுகையில், “டெல்லி கேபிடல்ஸ் முகாமில் இருப்பது மிகவும் அருமையாக இருந்தது. நான் இங்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். ஐபிஎல் அணியுடன் இது எனது முதல் வலையாக இருந்ததால் நான் சற்று பதற்றமாக உணர்ந்தேன்.இருப்பினும் ஐபிஎல் அணியுடன் நான் ஒரு நல்ல அமர்வைக் கொண்டிருந்தேன். ஆனால் பேட்டிங் செய்ய ஆரம்பித்தவுடன், நான் வேறு எதை பற்றியும் நினைக்கவில்லை.” இவ்வாறு ஹெப்பர் கூறினார்.