ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணி லக்னோ அணியை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.

www.indcricketnews.com-indian-cricket-news-10049

மும்பை: ஐபிஎல் தொடரின் 62ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று ப்ரபோர்ன் மைதானத்தில்  பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் ஓப்பனர் ஜோஸ் பட்லர் 2(6) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனைத் தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த சஞ்சு சாம்சன்-யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி அதிரடியாக விளையாடி பவர்பளே முடிவதற்குள்ளேயே 50 ரன்களை கடந்தது. இந்நிலையில் தொடர்ந்து அதிரடி காட்டிய கேப்டன் சாம்சன் 6 பவுண்டரி உட்பட 32(24) ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 6 பவுண்டரி,1 சிக்ஸர் உட்பட 41(29) ரன்களில் வெளியேறினார்.

அதன்பிறகு ஜோடி சேர்ந்த தேவ்தத் படிக்கல்-ரியான் பராக் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இருப்பினும் தேவ்தத் படிக்கல் 5 பவுண்டரி,2 சிக்ஸர் உட்பட 39(18) ரன்களுடனும், தேவைப்பட்ட நேரத்தில் அதிரடியாக விளையாடிய ரியான் பராக் 19(16) ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் களமிறங்கிய நீஷமும் 14(12) ரன்களில் ரன் அவுட்டாக,ராஜஸ்தான் அணி 20 ஓவருக்கு 6 விக்கெட் இழந்து 178 ரன்கள் எடுத்தது. இதில் அஷ்வின் 10(7) மற்றும் ட்ரெண்ட் போல்ட் 17(9)  இறுதிவரை களத்தில் இருந்தனர். இதனையடுத்து இலக்கை துரத்திக் கொண்டு களமிறங்கிய லக்னோ அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில்   தொடக்க ஆட்டக்காரரான குயிண்டன் டி காக் 7(8) ரன்களிலும், அடுத்தவந்த ஆயுஷ் பதோனி டக் அவுட்டாகியும் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேறினர். இதனைத்தொடர்ந்து மறுமுனையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல் ,ப்ர்சித் கிருஷ்ணா வீசிய 6ஆவது ஓவரில் 10(19) ரன்களுக்கு ஆட்டமிழந்தால், 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி தடுமாறியது.

அதன்பிறகு அணியை காப்பாற்ற களமிறங்கிய க்ருனால் பாண்டியா-தீபக் ஹூடா ஜோடி  ராஜஸ்தான் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு ,சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினர். இருப்பினும் அஷ்வின் பந்துவீச்சை எதிர்கொண்ட க்ருனால் சிக்ஸர் அடிக்க முற்பட்டு 25(23) ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் பொறுப்பாக விளையாடிய தீபக் ஹூடா அரைசதம் விளாசினார்.

தொடர்ந்து சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தீபக் ஹூடா 5 பவுண்டரி,2 சிக்ஸர் உட்பட 59(39) ரன்களுக்கு ஆட்டமிழக்க. அவரைத்தொடர்ந்து வந்த ஹோல்டரும் 1(2) ரன்னுடன் வந்த வேகத்திலே வெளியேறி ஏமாற்றமளித்தார்.

இறுதியில் ஸ்டாய்னிஸ்ம் பெரிய இன்னிங்ஸ் ஆட முற்பட்டு 27(17) ரன்களுடன் வெளியேறினார். இதனால் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்த லக்னோ அணி 154 ரன்களை மட்டுமே எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம் ரன் ரேட் அடிப்படையில் லக்னோ அணி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

Be the first to comment on "ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணி லக்னோ அணியை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது."

Leave a comment

Your email address will not be published.


*