ஐபிஎல் 2022: மெகா ஏலத்தில் ஆர்சிபியால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஃபாஃப் டு பிளெசிஸ் உடனான உரையாடலை விராட் கோலி வெளிப்படுத்தினார்.

www.indcricketnews.com-indian-cricket-news-104

நியூ டெல்லி: ராயல் சேலஞ்சர்ஸ் அணியை கடந்த 2011-2021வரை  வழிநடத்திய விராட் கோலி, 2013-இல் தான் நிரந்தர கேப்டன் ஆனார். எட்டு சீசன்களுக்கு கேப்டனாக இருந்த கோஹ்லி பதவிவிலகியைத் தொடர்ந்து, கடந்த மாதம் நடந்த மெகா ஏலத்தில் ரூ.7 கோடிக்கு உரிமையாளரால் வாங்கப்பட்ட  தென்னாப்பிரிக்காவின் மூத்த பேட்ஸ்மேன் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையில் ஆர்சிபி இப்போது ஐபிஎல்-2022 தொடரை ஆடவிருக்கிறது. 

இந்நிலையில்  பயோ-பப்பிளில் நுழைவதற்கு முன்பு,  ஆர்சிபியில் தனது புகழ்பெற்ற 15 ஆண்டுகளைப் பற்றி ‘ஆர்சிபி போல்ட் டைரிஸ்’-இல் பகிர்ந்துகொண்ட கோஹ்லி. அதைப்பற்றி கூறுகையில், “ஐபிஎல்-ல் நான் இவ்வளவு தூரம் வந்தது நம்பமுடியாதது. இத்தொடரில் நான் நிறைய பொறுப்புகள் மற்றும் கடமைகளில் இருந்து விலகியிருப்பதால், புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடன் இருக்கிறேன்.

வாழ்க்கை மிகவும் நல்ல இடத்தில் உள்ளது. எங்களுக்கு இப்போது ஒரு குழந்தை உள்ளது. எங்களுக்கென்று ஒரு குடும்பம் உள்ளது. என்னைப் பொறுத்தவரை  மிகவும் மகிழ்ச்சியுடனும் அர்ப்பணிப்புடனும் வாழவேண்டிய வாழ்க்கை இது.” “கிரிக்கெட் விளையாடுவதில் எனக்குப் பிடித்ததைச் செய்கிறேன். இப்போது எனது கவனம் மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் உள்ளது. எனவே களத்தில் வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க விரும்புகிறேன்.

இந்த அணிக்கும், இதன் உரிமையாளருக்கும் நான் பல ஆண்டுகளாக எந்த சுமையும் இல்லாமல் இருக்கிறேன். எனவே என்னை முழுமையாகக் கொடுக்க விரும்புகிறேன். அதற்காக முற்றிலும் தயாராக இருக்கிறேன்.” என்று  ஐபிஎல்-ன் ஒட்டுமொத்த பயணம் மற்றும் அவரது குடும்பத்தின் இருப்புபற்றி கோஹ்லி பிரதிபலித்தார்.

அதேசமயம் டுபிளெசிஸ் பற்றி மரியாதையான வார்த்தைகளில் குறிப்பிட்டுள்ள கோஹ்லி, “டுபிளெசிஸ்  கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படபோகிறார் என்று ஏற்கனவே அவருக்கு செய்தி அனுப்பினேன். ஐபிஎல் பதிப்பில் டுபிளெசிஸ் திடகாத்திரமான தலைமைத்துவத் திறமையே அவரது சேவையைப் பெறத் திட்டமிடப்பட்டதன் காரணம்.

பெங்களூரு அணியை பொறுத்தவரை, டுபிளெசிஸ் நல்ல அனுபவ வீரர். அவரை கேப்டனாக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்ததால்தான் ஏலத்தில் எடுத்தோம். ஓய்வறையில் நாங்கள் மிகவும் மரியாதை அளிக்கும் ஒரு தலைவர் தேவை.மேலும் கட்டளைபோடும்  கேப்டன் வேண்டுமே தவிர மாறாக கோரிக்கைகள் வைக்கும் கேப்டனல்ல.ஏனென்றால் அவர் கட்டளைகள் மூலமே சாதித்துள்ளார். “

“டுபிளெசிஸ் ஒரு டெஸ்ட் கேப்டனாக ஏற்கனவே நிறைய பாராட்டுகளை பெற்றுள்ளார். அதன்அடிப்படையில் இந்த ஆண்டு ஆர்சிபிஐ-ஐ டுபிளெசிஸ் வழிநடத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கேப்டனாக ஒரு மகத்தான வேலையைச் செய்வார் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். நாங்கள் அனைவரும் அவருடன் நன்றாக பழகுகிறோம். மற்றெல்லா தோழர்களும் இந்த சூழலையும் அணியையும் மிகவும் ரசிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். டுபிளெசிஸ் பல சாதனைகளை புரிவார் எனறு நம்பிக்கை உள்ளது. மேலும் ஆர்சிபிக்கு எப்போதும் போல் உறுதுணையாகவும், பேட்டிங்கில் ஜொலிப்பேன் என்ற நம்பிக்கையும் உள்ளது.” இவ்வாறு கோஹ்லி தெரிவித்துள்ளார்.