ஐபிஎல் 2022: பேட்டிங் மற்றும் பவுலிங்-ல் அசத்திய சிஎஸ்கே அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

www.indcricketnews.com-indian-cricket-news-0049

மும்பை: ஐபிஎல் தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் நேற்று மும்பையின் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

இதனைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய சிஎஸ்கே தொடக்க வீரரான ருதுராஜ்  கெய்க்வாட் அதிரடியாக விளையாட முற்பட்டு 3பவுண்டரி உட்பட 17(16) ரன்களுடன் ஹசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழக்க , அடுத்துவந்த மொயீன் அலி 3(8) ரன்களுடன்  எதிர்பாரதவிதமாக ரன்அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

இந்நிலையில் தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த வீரரான ராபின் உத்தப்பா, ஷிவம் தூபேவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விக்கெட் இழப்பை தடுத்து வந்தார். இருப்பினும் முதல் 10 ஓவரில்  60 ரன்கள் மட்டுமே அடித்த இந்த ஜோடி  அதன்பின்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மின்னல் வேகத்தில் ஸ்கோரை உயர்த்தினர்.இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4பவுண்டரி, 9சிக்ஸர் விளாசிய உத்தப்பா 88(50) ரன்களுடன் ஹசரங்கா பந்து வீச்சில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா0(1) ஹசரங்கா வீசிய அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஷிவம் தூபே 5பவுண்டரி, 8சிக்ஸர் உட்பட 95(46) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார்.

இதனால் 20 ஓவருக்கு 4 விக்கெட் இழந்த சிஎஸ்கே அணி 216 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 8(9) ரன்களுடனும் , அனுஜ் ராவத் 12(16) ரன்களுடனும் தீக்ஷனா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த விராட் கோலி ஒரு ரன்னுடன் முகேஷ் சௌத்ரியிடம் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி  2பவுண்டரி, 2சிக்ஸர் உட்பட 26(11) ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். இதனால் 50 ரன்களுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியபோது பார்ட்னர்ஷிப் அமைத்த சுயாஸ் பிரபுதேசாய் – ஷபாஸ் அஹ்மத் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இந்நிலையில் தீக்‌ஷனா பந்துவீச்சால் 5பவுண்டரி, 1சிக்ஸர் உட்பட 34(18) ரன்களைச் சேர்த்திருந்த பிரபுதேசாயும், 4பவுண்டரி உட்பட 41(27) ரன்களில் ஷபாஸ் அஹ்மதும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதனையடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹசரங்கா 7(3), ஆகாஷ் தீப் 0(2) ஆகியோர் ஜடேஜாவின் ஓரேஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி தினேஷ் கார்த்திக் ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் 2பவுண்டரி, 3சிக்ஸர் உட்பட 34(24) ரன்களுடன் பிராவோ வீசிய 18வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

இதனால் ஆர்சிபி அணி 20 ஓவருக்கு 9 விக்கெட் இழந்து 193 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தனது முதல்வெற்றியை பதிவுசெய்தது.

Be the first to comment on "ஐபிஎல் 2022: பேட்டிங் மற்றும் பவுலிங்-ல் அசத்திய சிஎஸ்கே அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது."

Leave a comment

Your email address will not be published.


*