ஐபிஎல் 2022: தோனி மீண்டும் கேப்டனாக திரும்பியதில், ஐதராபாத் அணியை வீழ்த்திய சென்னை அணி அபார வெற்றிபெற்றது.

www.indcricketnews.com-indian-cricket-news-10002

மும்பை : ஐபிஎல் தொடரின் 46ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் நேற்று  பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட்- டேவன் கான்வே ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர்.

இதனால் பவர்பிளே முடிவில் சிஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு அதிரடியாக விளையாடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 33 பந்துகளில் அரைசதம் விளாசியதன் மூலம், சிஎஸ்கே அணி 10.5ஆவது ஓவரில் 100 ரன்களை கடந்தது.

அவரைத்தொடர்ந்து மறுமுனையில் முதலில் பொறுமையாக விளையாடிய கான்வே, பின்னர் அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் அரைசதம் விளாசினார். இந்நிலையில் பி.டி.நடராஜன் பந்துவீச்சில் தவறான ஷாட் ஆடிய  ருதுராஜ் 6 பவுண்டரி,6 சிக்ஸர் உட்பட 99(57) ரன்கள் எடுத்த நிலையில்,புவனேஷ்வர் குமாரிடம் கேட்ச் கொடுத்து  சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 182 ரன்கள் குவித்தது.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் தோனி 8(7) ரன்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, மறுமுனையில் கான்வே 8 பவுண்டரி,4 சிக்ஸர் உட்பட 85(55) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார். இதனால் சிஎஸ்கே அணி 20 ஓவருக்கு 2 விக்கெட் மட்டுமே இழந்து 202 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மா-கேன் வில்லியம்ஸன் ஜோடி அதிரடியாக விளையாடி சிஎஸ்கேவுக்கு நெருக்கடி அளித்தனர். ஆனால் முகேஷ் சௌதரி வீசிய 6ஆவது ஓவரில் அபிஷேக் 5 பவுண்டரி,1 சிக்ஸர் என 39(24) ரன்களிலும், அடுத்துவந்த ராகுல் திரிபாதி டக் அவுட்டாகியும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர்.

அதன்பின்னர் களமிறங்கி தொடர்ச்சியாக 2 சிக்ஸர்க்ளை விளாசிய எய்டன் மார்க்கரம் 17(10) ரன்களுடன் சாண்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய வில்லியம்சன் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது 2 பவுண்டரி,2 சிக்ஸர் உட்பட 47(37) ரன்களுடன் பிரிட்டோரியஸ் பந்துவீச்சில் நடையைக்கட்டினார்.

இதனால் ஐதராபாத் அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது. இந்நிலையில் தொடர்ந்து களமிறங்கிய ஷஷாங் சிங் 15(14) ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 2(2) ரன்களிலும் முகேஷ் சௌத்ரி பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த பூரன் 3 பவுண்டரி,6 சிக்ஸர் உட்பட 64(33) ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார்.

ஆனாலும் 20 ஓவருக்கு ஐதராபாத் அணி 6 விக்கெட் இழந்து 189 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் சிஎஸ்கே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக இந்த சீசனில் தனது வெற்றியை பதிவுசெய்தது.

Be the first to comment on "ஐபிஎல் 2022: தோனி மீண்டும் கேப்டனாக திரும்பியதில், ஐதராபாத் அணியை வீழ்த்திய சென்னை அணி அபார வெற்றிபெற்றது."

Leave a comment

Your email address will not be published.


*