ஐபிஎல் 2022: சிஎஸ்கே அணிக்காக விளையாட முடிந்தால் அது மிகவும் நல்லது என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்

www.indcricketnews.com-indian-cricket-news-039

நியூ டெல்லி: ஐபிஎல் 2022 சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூரில் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில்  நடைபெறவுள்ளது. இந்நிலையில் பஞ்சாப், மும்பை, டெல்லி, பெங்களூரு, குஜராத் மற்றும் கொல்கத்தா என 6 அணிகளில் விளையாடிய தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் ,தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை 213 ஐபிஎல் போட்டிகளில் 19 அரைசதங்கள் உட்பட 4046 ரன்கள் எடுத்துள்ள கார்த்திக், அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் எடுக்கப்படவுள்ளார். இதுகுறித்து கார்த்திக் கூறுகையில், “ஐபிஎல் 2022 க்கு தனக்கு விருப்பமான அணியைத் தேர்ந்தெடுப்பது கடினமான ஒன்று, ஆனால் சென்னையை சேர்ந்தவன் நான்.

அந்த வகையில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தால்  நன்றாக இருக்கும் .ஆனால் அது என் கையில் இல்லை. எந்த அணியில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அந்த அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். எதிர்வரும் சீசனுக்காக தீவிரமாக பயிற்சி செய்து வருகிறேன்” இவ்வாறு பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவிடம் தெரிவித்தார்.

மேலும் வரும் அக்டோபர் மாதம் முதல் ஐசிசி டி20 உலககோப்பை 2022 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதில் வெற்றிபெறும் நோக்கத்துடன் பிசிசிஐ நிர்வாகம் ரோகித் சர்மா தலைமையின் கீழ் புதிய அணியை உருவாக்கி வருகிறது. 

இந்நிலையில் 2019 உலகக் கோப்பை வரை 32 டி20 போட்டிகளில் 143.52 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட் விகிதத்தில் 399 ரன்களை குவித்துள்ள கார்த்திக்கு, அதன்பிறகு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும் ஐபிஎல் தொடரிலும், உள்ளூர் தொடர்களிலும் பங்கேற்று விளையாடி வருகிறார்.

தற்போது தனது நண்பரும் வழிகாட்டியுமான அபிஷேக் நாயரின் வழிகாட்டுதலின் கீழ் மும்பையில் ஹார்ட் யார்டுகளில் ஈடுபட்டுள்ள அவர் இதுகுறித்து கூறுகையில், “சமீப காலங்களாக பினிஷர் இடத்தில் சரியான வீரர்கள் இல்லாமல் இந்திய டி20 அணி தடுமாறி வருகிறது. அதேபோல மிடில் ஆர்டருக்கான வீரர்களும், விக்கெட் கீப்பர்களும் இந்திய டி20 அணியில்  தேவைப்படுகிறார்கள்.

எனவே அந்த இடத்தில் விளையாட முயற்சிக்க உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் ரன் எடுத்த 36 வயதான ஷிகர் தவான் , டி20 உலகக்கோப்பையில் பங்காற்றிய பாகிஸ்தானின் ஷோயப் மாலிக் மற்றும் சமீபத்தில் ஓய்வு பெற்ற முகமது ஹபீஸ் ஆகியோரின் உதாரணங்களை மேற்கோள் காட்டிய கார்த்திக், “வயது ஒரு அளவுகோல் அல்ல .போட்டியில் பங்கேற்க அனுபவம்தான் மிக முக்கிய காரணியாக உள்ளது.

அதை கடந்த சில போட்டிகளில் தெளிவாகக் காணலாம்.” இவ்வாறு   அதில் தெரிவித்தார்.