ஐபிஎல் 2022: கே.எல்.ராகுலின் சதம்,குர்னல் பாண்டியாவின் அசத்தலான பந்துவீச்சு: மும்பை இந்தியன்ஸை 8வது முறையாக தோல்வியை தழுவ வழிவகுத்தது.

www.indcricketnews.com-indian-cricket-news-0082

மும்பை: ஐபிஎல் தொடரின் 37ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ட்ண்ஸ் அணிகள் நேற்று வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

இதன்படி பேட்டிங்செய்ய களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல்-குயின்டன் டி காக் ஜோடியில் ராகுல் ஒருபுறம் நிலைத்துநின்று அடித்து விளையாட, டி காக் மறுமுனையில் பும்ரா பந்துவீச்சில்  10(9)ரன்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இதனையடுத்து களமிறங்கி நிதானமாக விளையாடிய மணிஷ் பாண்டே 22(22) ரன்களுடன் பொல்லார்டு பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த மார்கஸ் ஸ்டோனிஸ் ரன் ஏதுமின்றி டேனியல் சாம்ஸ் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார்.

இந்நிலையில் எவ்வித அழுத்தங்களையும் சந்திக்காமல் சிறப்பாக விளையாடிய ராகுல் அரைசதம் கடக்க, மறுமுனையில் பொல்லார்டு பந்துவீச்சில் குர்னல் பாண்டியா 1(2) ரன்னுடன் நடையைக்கட்டினார்.இதனால் லக்னோ அணி 102 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்தது.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய தீபக் ஹூடா 10(9) ரன்களுடனும், ஆயுஷ் பதோனி 14(11) ரன்களுடனும் மெரிடித் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். ஆனாலும் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் இந்த சீசனில் தனது இரண்டாவது சதத்தை பதிவுசெய்து 12 பவுண்டரி,4 சிக்ஸர் என 103(62) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.இதன்மூலம் லக்னோ அணி 20 ஓவருக்கு 6 விக்கெட் இழந்து 168 ரன்கள் சேர்த்தது.

இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ரோகித் ஷர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தார். இருப்பினும் மறுமுனையில் விளையாடிய இஷான் கிஷன் 8(20) ரன்களுடன் பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரவீஸ் 3(5) ரன்களில் மோசின் கான் பந்துவீச்சில் நடையைக்கட்டினார்.

எனினும் 5 பவுண்டரி,1 சிக்ஸர் அடித்த ரோகித் ஷர்மா அரைசதம் கடப்பார்  என எதிர்பார்க்கப்பட்டபோது முக்கியமான கட்டத்தில் 39(31) ரன்களுடன் குர்னல் பாண்டியா பந்துவீச்சில் வெளியேற, அடுத்துவந்த சூர்யகுமார் யாதவ் 7(7) ரன்களோடு ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால் மும்பை அணி 67 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.

இருப்பினும் தனியொரு ஆளாக போராடி திலக் வர்மா ரன்களை குவித்தார். ஆனால் 2 பவுண்டரி,2 சிக்ஸர் விளாசி 38(27) ரன்கள் எடுத்தபோது ஹோல்டர் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் மும்பை அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டது.

இதில் பொல்லார்டு 19(20), டேனியல் சாம்ஸ் 3(7) , உனத்கட் 1(1) ஆகிய மூவரும் குர்னல் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால்,மும்பை அணி 20 ஓவருக்கு 8 விக்கெட் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் லக்னோ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Be the first to comment on "ஐபிஎல் 2022: கே.எல்.ராகுலின் சதம்,குர்னல் பாண்டியாவின் அசத்தலான பந்துவீச்சு: மும்பை இந்தியன்ஸை 8வது முறையாக தோல்வியை தழுவ வழிவகுத்தது."

Leave a comment

Your email address will not be published.


*