ஐபிஎல் 2022: கடைசி ஓவரில் ஐதராபாத்தை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்ற லக்னோ அணி

www.indcricketnews.com-indian-cricket-news-0019

மும்பை: ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் நேற்று மும்பையிலுள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் பலப்பரிட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல்- குயின்டன் டி காக் ஜோடியில் வாஷிங்டன் சுந்தர் வீசிய 2வது ஓவரில் டி காக் 1(4) ரன்னுடனும், அடுத்துவந்த எவின் லீவிஸ்  4வது ஓவரில் 1(5) ரன்னுடன் ஆட்டமிழந்தனர்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மணிஷ் பாண்டேவும் 11(10) ரன்களில்  ஷெஃபெர்டு பந்துவீச்சில் ஆட்டமிழந்ததால் ,லக்னோ அணி 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில் மறுமுனையில் நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல்- தீபக் ஹூடாவுடன் இணைந்து அதிரடியாக விளையாடி இருவரும் அரைசதங்களை கடந்தனர். ஆனால் தீபக் ஹூடா 3 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 51(33) ரன்களுடன் ஷெஃபெர்டு பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனைத்தொடர்ந்து அதிரடியாக ஆடிய ராகுல் 6 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 68(50) ரன்கள் எடுத்து நடராஜன் வீசிய 18வது ஓவரில் எல்பிடபள்யூ ஆகி ஆட்டமிழக்க, அதேஓவரில்  குருணால் பாண்டியாவும் 6(3) ரன்களில் வெளியேறினார். இறுதியில் 19(12) ரன்கள் எடுத்த ஆயுஷ் பதோனி ஆட்டத்தின் கடைசி ஓவரில் ரன் அவுட்டாகி வெளியேறியதால் லக்னோ அணி 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்தது.

இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேன் வில்லியம்சன்-அபிஷேக் ஷர்மா ஜோடியில் ஆவேஷ் கான் வீசிய 3வது ஓவரில் வில்லியம்சன் 16(16) ரன்களுடனும், 5வது ஓவரில் அபிஷேக் ஷர்மா 13(11) ரன்களுடனும் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய எய்டன் மார்க்கரமும் குருணால் பாண்டியா பந்துவீச்சால் 12(14) ரன்களுடன் ஏமாற்றமளித்தார். இதனால் 10 ஓவர் முடிவிலேயை 3 விக்கெட் இழந்து  82 ரன்களுடன் பின்னடைவை சந்தித்த அணியை காப்பாற்ற ஓரளவுக்கு ரன்களை குவித்த ராகுல் திரிபாதி 44(30) ரன்களுடன் குருணால் பாண்டியா பந்துவீச்சால் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனையடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்த நிகோலஸ் பூரன்-வாஷிங்டன் சுந்தர் ஜோடியில் ஆவேஷ் கான் வீசிய 17வது ஓவரில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 34(24) ரன்களுடன் பூரன் ஆட்டமிழக்க , அடுத்துவந்த அப்துல் சமத் அதே ஓவரில் டக்அவுட் ஆனார்.

இறுதியில் ஹோல்டர் வீசிய 19வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 18(14) ரன்களுடன் ஆட்டமிழக்க, அடுத்துவந்த புவனேஷ்வர் குமார் 1(2), ஷெஃபெர்டு 8(8) ஆகியோரும் அதேஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.  இதனால் ஐதராபாத் அணி 20 ஓவருக்கு 9 விக்கெட் இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Be the first to comment on "ஐபிஎல் 2022: கடைசி ஓவரில் ஐதராபாத்தை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்ற லக்னோ அணி"

Leave a comment

Your email address will not be published.


*