ஐபிஎல் 2022 ஏலத்தில் இந்திய U19 உலகக்கோப்பை நட்சத்திரங்கள் தங்கம் வென்றனர்

www.indcricketnews.com-indian-cricket-news-063

பெங்களூரு: 2022ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் கடந்த இரண்டு நாட்களாக பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வந்தது. இதில் இந்தியா 5-வது முறையாக ஜூனியர் உலககோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய ஆல்-ரவுண்டர் ராஜ் அங்கட் பாவாவை வாங்க அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. ஆனால் ரூ.2 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது.

அதேபோல அதிரடியான பேட்டிங், அபாரமான பவுலிங் என இரண்டிலும் மிரட்டக்கூடிய இளம் ஆல்ரவுண்டரான ராஜ்வர்தன் ஹேங்கர்கேகர் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசக்கூடியவர். இவர் U19 உலகக் கோப்பையை  அண்மையில் வென்ற இந்திய அணியின்  தொடக்க ஆட்டக்காரராக முக்கிய பங்காற்றியவர்.

மேலும் ஹர்திக்  பாண்டியா மாதிரியான அதிரடி ஆல்ரவுண்டரை கழட்டிவிட்ட மும்பை இந்தியன்ஸ் அணி, அவரது இடத்தை நிரப்ப திட்டமிட்டு,ஹங்கர்கேகரை ஏலத்தில் எடுக்க முனைந்தது. ஆனால் அவர் மீது சிஎஸ்கேவும் ஆர்வம் காட்ட, இருபெரும் சாம்பியன் அணிகளும் ஹங்கர்கேகருக்காக போட்டி போட்டன. இறுதியில் ரூ.1.5 கோடிக்கு சிஎஸ்கே அணி அவரை எடுத்தது. 

மேலும் சர்வதேச போட்டிகளில் விளையாடாத இளம் ஆல் ரவுண்டர்களில்  ஒருவரான ஜூனியர் அணியின் கேப்டன் யாஷ் துல் ரூ.50 லட்சத்திற்கே விலை போனார். அவர் தனது ஐபிஎல் பயணத்தை சொந்த ஊர் அணியான டெல்லி கேப்பிட்டல்சுடன் தொடங்கவுள்ளார். அதே நேரம், U19 உலகக் கோப்பையை வெல்ல உதவிய வேகப்பந்து வீச்சாளர் வாசு வட்ஸ், ஸ்பின்னர் விக்கி ஓஸ்ட்வால் ஆகிய இருவரையும் எந்த அணியும் வாங்கவில்லை.

ஆனால் மெகா ஏலத்தின் தொடக்க நாளில் 10 அணிகளும் சேர்ந்து மொத்தம் 74 வீரர்களை ஏலத்தில் எடுத்தது. அதில் அண்மையில் நடைபெற்ற U19 உலகக்கோப்பையில் 18 சிக்ஸர்களுடன் 506 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் எடுத்தவர் என்கிற சாதனையைப் படைத்த தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் டெவால்ட் ப்ரீவிஸ்,  ரூ 3 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இவர் தென்னாப்பிரிக்க முன்னணி வீரரான ஏபி டி வில்லியர்ஸைப் போலவே விளையாடுவதால் பேபி ஏபி என்று ரசிகர்கள் அழைக்கிறார்கள்.

மேலும் திறமை வாய்ந்த இந்திய வீரர்களுக்கு பெரும்பாலான அணிகள் அதிக பணம் செலவழிக்கத் தயாராக இருந்தது.குறிப்பாக தீபக் சாஹரைத் தக்கவைத்துக் கொள்ள சிஎஸ்கே அணி ரூ.14 கோடி வழங்கியது. அதை பின்னுக்குத் தள்ளிய மும்பை இந்தியன்ஸ் இஷான் கிஷனுக்காக ரூ.15.25 கோடியை வாரி வழங்கியது.

அதேபோல கடந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய அவேஷ் கானை ஏலத்தில் எடுக்க பல அணிகள் போட்டியிட்ட நிலையில், 10 கோடி ரூபாய் கொடுத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி எடுத்தது. இதன்மூலம் சர்வதேச விளையாட்டில் விளையாடாமல் அதிக தொகைக்கு ஏலம் போனவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.