ஐபிஎல் 2022 :அறிமுக வீரர் குல்தீப் சென் வீசிய கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றிபெற்றது.

www.indcricketnews.com-indian-cricket-news-0039

மும்பை: ஐபிஎல் தொடரின் 20வது லீக் ஆட்டததில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ட்ண்ஸ் அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று பலப்பரீட்சை நடத்தியது. இதில்  டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரான பட்லர் அதிரடியாக விளையாட முற்பட்டு 13(11) ரன்களுடன் ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 13(12) ரன்களுடன் ஹோல்டர் பந்துவீச்சில் எல்பிடபள்யூ-ஆகி வெளியேறினார்.

இந்நிலையில் மறுபுறம் பொறுப்பாக விளையாடி 4 பவுண்டரி உட்பட 29(29) ரன்கள் எடுத்த படிக்கல் பெரிதளவில் ரன் எடுக்கமுடியாமல் அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழக்க, அடுத்துவந்த வன்டீர்துஷன் 4(4) வந்தவேகத்தில் நடையைக்கட்டினார். இதனால் 67 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து ராஜஸ்தான் அணி திணறியது. 

அப்போது களமிறங்கி அரைசதம் கடந்த ஹெட்மியர் 1 பவுண்டரி, 6 சிக்ஸர் என அபாரமாக விளையாடி 59(36) ரன்களை குவித்தார்.  அவருக்கு துணையாக மறுபுறம் பொறுமையாக விளையாடிய அஸ்வின் ரன்கள் குவிக்கும் வேகம் குறைவாக இருந்ததால் 28(23) ரன்களுக்கு ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார்.

இந்நிலையில் மாற்றுவீரராக களமிறங்கிய ரியான் பராக் 8(4)ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவருக்கு 6 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது. இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய லக்னோ அணியின் ஆரம்பமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் ட்ரெண்ட் பௌல்ட் வீசிய ஓவரின் முதல்பந்தில் ராகுல் 0(1) கோல்டன் டக்-அவுட்டாக,  தொடர்ந்துவந்த கிருஷ்ணப்பா கௌதம் 0(1) இரண்டாவது பந்தில் கோல்டன் டக்-அவுட்டானார்.

இதன்பின்னர் களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் 8(14) ரன்களுடன் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த தீபக் ஹுடா 25(4) ரன்கள் எடுத்து குல்தீப் சிங் பந்துவீச்சில் நடையைக்கட்ட லக்னோ அணி திணறியது.

இதனைத்தொடர்ந்து 5(7) ரன்களுடன் ஆயுஷ் படோனி,மறுமுனையில் பொறுப்புடன் விளையாடி 39(32) ரன்கள் எடுத்த டி காக், தொடர்ந்து களமிறங்கி 22(15) ரன்கள் எடுத்த க்ருணல் பாண்டியா, 13(7) ரன்களுடன் சமீரா என யுவேந்திர சாஹலின் சுழற்பந்தில் சிக்கி அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆட்டமே தலைக்கீழாக மாறியது.

எனினும் இறுதியில் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ்- ஆவேஷ் கான் ஆகியோர் களத்திலிருந்தனர். இதில் ஸ்டாய்னிஸ் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி 19வது ஓவரில் 19 ரன்களை விளாசினார்.இருப்பினும்  இறுதியில் 2 பந்துக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஸ்டாய்னிஸ் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசியதால் லக்னோ அணி 20 ஓவருக்கு 162 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Be the first to comment on "ஐபிஎல் 2022 :அறிமுக வீரர் குல்தீப் சென் வீசிய கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றிபெற்றது."

Leave a comment

Your email address will not be published.


*