ஐபிஎல் 2022:லீக் ஆட்டத்தின் கடைசி போட்டியை வெற்றியுடன் நிறைவுசெய்தது பஞ்சாப் அணி.

www.indcricketnews.com-indian-cricket-news-10075

மும்பை: ஐபிஎல் தொடரின் பிளேஆஃப் சுற்றுக்கு ஏற்கனவே 4 அணிகள் தகுதி பெற்றநிலையில்,கடைசி லீக் ஆட்டம் நேற்று வான்கடே மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்க்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வுசெய்வதாக அறிவித்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிரியம் கார்க் 4(7) ரன்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த அபிஷேக் ஷர்மா-ராகுல் த்ரிப்பாட்டி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் ஹர்ப்ரீத் ப்ரார் பந்துவீச்சில் த்ரிப்பாட்டி 20(18) ரன்களுடனும், மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் 5 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 43(34) ரன்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில் இவர்களையடுத்து களமிறங்கிய எய்டன் மார்க்ரம் 21(17) ரன்கள் எடுத்தபோது ஹர்ப்ரீத் ப்ரார் வீழ்த்த, அடுத்துவந்த நிக்கோலஸ் பூரன் வெறும் 5(20) ரன்களுடன் நேதன் எல்லிஸ் பந்துவீச்சில் நடையைக்கட்டினார். இதனால் ஐதராபாத் அணி சரிவை நோக்கி சென்றது. அதன்பின்னர் அணியைக் காப்பாற்ற களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர்-ரோமரியோ ஷிஃபர்ட் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

ஆனால் நேதன் எல்லிஸ் வீசிய கடைசி ஓவரில் 3 பவுண்டரி,2 சிக்ஸர் அடித்த சுந்தர் 25(19), ஜெகதீஷா சுஜித் 0(1), புவனேஷ்வர் குமார் 1(1) என தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்த ஐதராபாத் அணி 20 ஓவருக்கு 8 விக்கெட் இழந்து 157 ரன்கள் எடுத்தது. இதில் 2 சிக்ஸர்,2 பவுண்டரி அடித்த ஷிஃபர்ட் 26(15) ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார்.

இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜானி பேர்ஸ்டோவ்-ஷிகர் தவான் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் ஃபரூக்கி பந்துவீச்சில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 5 பவுண்டரி விளாசிய பேர்ஸ்டோவ் 23(15) ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய தமிழக வீரர் ஷாரூக்கான் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். இருப்பினும் 2 பவுண்டரி,1 சிக்ஸர் உட்பட 19(10) ரன்கள் எடுத்து உம்ரன் மாலிக் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த மயங்க் அகர்வால் 1(4) ரன்னுடன் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் நடையைக்கட்டினார்.

அதன்பின்னர் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 பவுண்டரி,2 சிக்ஸர் அடித்த தவான் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு 39(32) ரன்களில் ஃபரூக்கியிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜிதேஷ் வர்மா அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி,1 சிக்ஸர் உட்பட 19(7)ரன்களில் வெளியேற, தொடர்ந்து அதிரடியாக ஆடி சிக்ஸர் மழையை பொழிந்த லிவிங்ஸ்டன் 49(22) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.இதனால் 15.1 ஓவரிலேயே இலக்கை அடைந்த பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று,புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துடன் நிறைவு செய்துள்ளது.

Be the first to comment on "ஐபிஎல் 2022:லீக் ஆட்டத்தின் கடைசி போட்டியை வெற்றியுடன் நிறைவுசெய்தது பஞ்சாப் அணி."

Leave a comment

Your email address will not be published.


*