ஐபிஎல் 2022:குயிண்டன் டி காக்- மோசின் கான் அதிரடியால் லக்னோ அணி த்ரில் வெற்றிபெற்றது.

www.indcricketnews.com-indian-cricket-news-10065

மும்பை: ஐபிஎல் தொடரின் 66-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் நேற்று டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல்-குயிண்டன் டி காக் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து சிக்சர், பவுண்டரி என அடித்து ஆடிய டி காக் 36 பந்தில் அரைசதம் கடக்க, மறுமுனையில் பொறுமையாக விளையாடிய ராகுல் 41 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

இந்நிலையில் 16-வது ஓவரிலிருந்து சிக்ஸர் மழை பொழிந்த டி காக் 59 பந்துகளில் சதம் விளாசி, ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது சதத்தை பதிவுசெய்தார். அதன்பின்னர் 19-வது ஓவரில் 3 சிக்ஸர்களும், கடைசி ஓவரில் 4 பவுண்டரிகளும் விளாசிய-டி-காக் 140(70) ரன்களுடனும், மறுமுனையில் விளாசிய ராகுல் 68(51) ரன்களுடனும் இறுதிவரை களத்தில் இருந்தனர். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் ஒரு தொடக்க வீரர்கள் விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் எடுப்பது இதுவே முதல்முறையாகும்.

இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய மோஷின் கான் பந்துவீச்சில் தொடக்க ஆட்டக்காரர்களான வெங்கடேஷ் ஐயர் டக் அவுட்டாக, மறுமுனையில் அபிஜித் தோமர் 4(8) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த நிதிஷ் ரானா-ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி அதிரடியாக விளையாடினர். இந்நிலையில் ராணா 9 பவுண்டரி உட்பட 42(22) ரன்களில் கிருஷ்ணப்பா கௌதம் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் 4 பவுண்டரி,3 சிக்ஸர் விளாசிய ஸ்ரேயாஸ் 50(29) ரன்களில் ஸ்டோய்ன்ஸிடம் வீழ்ந்தார்.

இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய பில்லிங்ஸ் 2 பவுண்டரி,3 சிக்ஸர் உட்பட 36(24) ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஆண்ட்ரே ரஸல் 5(11) ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் அணியைக் காப்பாற்ற களமிறங்கிய ரிங்கு சிங்-சுனில் நரைன் ஜோடி  கடுமையாக போராடி ரன்களை குவித்தனர்.

இதனால் கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் ஸ்டோயின்ஸ் வீசிய முதல் மூன்று பந்துகளை ரிங்கு சிங் 1 பவுண்டரி,2 சிக்ஸர் விளாசி ஆட்டத்தின் பரபரப்பை கூட்டினார். ஆனால் அதன்பின் 5-வது பந்தை பவுண்டரிக்கு அடிக்க முற்பட்ட ரிங்கு சிங், எவன் லீவிஸின் அபாரமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார்.

இறுதியில் களமிறங்கிய உமேஷ் யாதவும் க்ளின் போல்ட் ஆக, கொல்கத்தா அணி 20 ஓவருக்கு 8 விக்கெட் இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த சீசனில் இரண்டாவது அணியாக ப்ளேஆஃப் சுற்றுக்கு  தகுதி பெற்றது.

Be the first to comment on "ஐபிஎல் 2022:குயிண்டன் டி காக்- மோசின் கான் அதிரடியால் லக்னோ அணி த்ரில் வெற்றிபெற்றது."

Leave a comment

Your email address will not be published.


*