ஐபிஎல் 2021: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வெற்றி பெற்றது கொல்கத்தா அணி….

www.indcricketnews.com-indian-cricket-news-074

அபுதாபி: ஐபிஎல் 14 வது சீசனின் 31 வது லீக் போட்டியில் ரயெல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதினார்கள். இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் முதலில் நாங்கள் பேட்டிங் செய்வதாகக் கூறினார். அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி  அணியின்  கேப்டன் விராட் கோலி தனது 4வது பந்திலேயே 5 ரன்கள் மட்டும் எடுத்து பிரசித் கிருஷ்ணா பந்தில் வெளியேறினார்.

இதையடுத்து யாரும் எதிர்பார்க்காதளவு அதிர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுத்தொடங்கியது. அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 22 (20) ரன்களும் , ஸ்ரீகர் பரத் 16 (19) ரன்களும்  என்ற குறைந்த அளவு  புள்ளிகள்  மட்டுமே எடுத்து  வெளியேறினார்கள். இந்நிலையில் கிளென்மேக்ஸ் வேல், ஏபி டிவிலியர்ஸ்  களத்தில் இருந்தார்கள்.

இவர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிவிலியர்ஸ் முதல் பந்துலேயே போல்ட் ஆக்கப்பட்டார். மேக்ஸ்வெல்லும் 10 (17) ரன்களில் வருண் சக்கரவர்த்திப் பந்தில்  அவுட் ஆனார். ஜேமி சன் 4 (12), ஹர்ஷல் படேல் 12 (10), சிராஜ் 8 (10) என்று 19 ஓவர்களில் 92 ரன்கள் மட்டுமே பெற்று ஆல் அவுட் ஆனது. மிகவும் குறைவான இந்த 92 புள்ளிகள் எதிரணிக்கு இலக்காக வைக்கப் பட்டது. இதையடுத்து  களம் இறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்திலேயே தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான சுப்மான் கில் – வெங்கடேஷ் ஐயர்   ஜோடி  இணைத்து த பவுண்டரிகளை அடித்து  3 ஓவர்கள் முடிவில் 22 ரன்களை குவித்தது. இந்த ஜோடி பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் தடுமாறி வந்தது ஆர்சிபி அணி. ஆனால் இந்த ஜோடியோ  வெற்றிக்கு 66 பந்துகள் இருக்கும் நிலையில்  11 ரன்கள் மட்டுமே தேவையாக வைத்திருந்தது. முற்றிலும் வெற்றிவாய்ப்பை இழந்த நிலையில் ஆர்சிபி அணியால் எதுவும் செய்ய இயலவில்லை.

இறுதியில்  சுப்மான் கில் (48) ரன்கள் மற்றும் அறிமுக வீரர் வெங்கடேஷ் ஐயர் (41) ரன்கள் எடுத்து தொடக்க விக்கெட்டுக்கு 82 ரன்கள் குவித்து விளாசினார்கள். இறுதியில்  கே.கே.ஆர் அணி 10 ஓவர்களில் 94/1 ஐ எளிதில் குவித்துவிட்டது. இதன் மூலம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை தோற்கடித்து மாபெரும் வெற்றியை தன்வசப் படுத்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

Be the first to comment on "ஐபிஎல் 2021: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வெற்றி பெற்றது கொல்கத்தா அணி…."

Leave a comment

Your email address will not be published.