ஐபிஎல் 2021: 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி…

www.indcricketnews.com-indian-cricket-news-104

அபுதாபி: ஐபிஎல் 2021 (செப் 28)ல் டபுள் ஹெட்டர்ஸ் ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் இரண்டாவது ஆட்டத்தில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிக்கொண்டது. இதில்  டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பெளலிங்கை தேர்வு செய்தது அதன்படி முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.

காயம் ஏற்பட்டிருந்த காரணத்தால் மாயங்க் அகர்வால் விளையாடவில்லை அவருக்குப் பதில் மன்தீப் சிங்குக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.  ஆனால் அவர் வெறும் 15 ரன்களில் க்ருனால் பாண்ட்யா ஓவரில் , எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். நம்பிக்கையாக கருதப்பட்ட க்றிஸ் கெயில் வெறும் 1 ரன்னில் கேட்ச் அவுட் ஆனார். பிறகு களமிறங்கிய கேப்டன் லோகேஷ் ராகுல் 21 ரன்களில் பொல்லார்டின் அதே ஓவரில் ஷார்ட் பிட்ச் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

எய்டன் மார்க்ரம் மட்டுமே சிறப்பாக விளையாடி 29 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அணிக்கு நம்பிக்கையளித்தார். இதன் பின் விளையாடிய  நிகோலஸ் பூரன் 2 ரன்களும் தீபக் ஹூடா 28 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள். இறுதியில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் மட்டும் எடுத்தது. 136 ரன்கள் மட்டுமே இலக்காக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வைக்கப்பட்டது. இதன்பின் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்க வீரரான ரோஹித் ஷர்மா வெறும் 8 ரன்களில் ஸ்பின்னர் ரவி பிஷ்னாய் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இது சற்று அதிர்ச்சியாகவே அனைவருக்கும் இருந்தது. இதற்கு அடுத்து வீசப்பட்ட பந்திலேயே சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டெம்ப் அவிட் ஆனார். அடுத்தடுத்து ஒரே ஓவரில் 2 முக்கிய வீரர்களின் விக்கெட்டை இழந்துவிட்டது. இதன் பின்வந்த சவுரப் திவாரி மற்றும்  ஹார்திக் பாண்டியா ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட ஆரம்பித்தார்கள். இலக்கு மிகவும்  சிறியது என்பதால் மிகவும் மெதுவான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். இந்நிலையில் திவாரி 37 பந்துகளில் 45 ரன்கள் அடித்து வெளியேறினார்.

அடுத்து ஹார்திக் பாண்டியாவுடன் பொல்லார்ட் இணைந்து  விளையாடி வந்த நிலையில்

கடைசி நான்கு ஓவர்களுக்கு 40 ரன்கள் தேவைபட்ட நிலையில் ஷமி வீசிய 17ஆவது ஓவரில் ஷார்திக் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்தார். அடுத்து அர்ஷ்தீப் வீசிய 18ஆவது ஓவரில் பொல்லார்ட் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்தார். தொடர்ந்து ஷமி வீசிய 19ஆவது ஓவரில் ஹார்திக் ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் விளாசி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர்கள் முடிவில் 137/4 ரன்கள் சேர்த்து, 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றியைப் பெற்றது. ஹார்திக் பாண்டியா 40 (30), கெய்ரன் பொல்லார்ட் 15 (7) ரன்கள் எடுத்து கடைசி வரை  களத்தில் இருந்தார்கள்.

Be the first to comment on "ஐபிஎல் 2021: 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி…"

Leave a comment

Your email address will not be published.