ஐபிஎல் 2021: 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி சிஎஸ்கே வை வீழ்த்தி தொடரை வென்றது…

www.indcricketnews.com-indian-cricket-news-012

துபாய்: ஐபிஎல் 2021 (அக்- 4)ல்  50வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தினார்கள். இந்த இரு அணிகளும் ஏற்க்கனவே ப்ளே ஆஃப் க்கு தகுதிப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். 

இதனால் முதலில் களம் கண்ட  சிஎஸ்கே ஓப்பனர்ஸ் ருத்ராஜ் மற்றும்  டூப்ளசிஸ் அதிரடியாக விளையாடி முதல் ஓவரிலேயே 16 ரன்கள் விளாசினார்கள்.  ஆனால் சிறிது நேரத்தில் டூப்ளசிஸ் (10) ரன்கள் எடுத்தார்.அக்ஷர் படேல் வீசிய பந்தில் டூப்ளிசிஸ் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து நார்ட் ஜே வீசிய பந்தை அடிக்க முயன்ற போது ருத்ராஜ்யும் அவுட் ஆனார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரியத் தொடங்கிய நிலையில் மொயின் அலியும் 5 ரன்களுக்கு வெகுவாக வெளியேறினார். சுரேஷ் ரெய்னாவுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட ராபின் உத்தப்பாவும் சரியாக ரன் ஏதும் அடிக்காமல் அஸ்வினின் பந்துவீச்சில் 18 ரன்களுக்கு அவுட் ஆனார். இதனால் சிஎஸ்கே  62 ரன்களுக்கு 4 ரன்களை இழந்தது.  பிறகு களமிறங்கிய தோனி மட்டுமே அம்பத்தி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி 18 (27) ரன்களில் அவுட் ஆனார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த அம்பத்தி ராயுடு தனியாளாக அரைசதம் கடந்தார் 55 ( 43) , மேலும் ஜடேஜா 1 (2)  ஆகியோர் கடைசிவரை களத்தில் இருந்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு  136 புள்ளிகள் மட்டுமே சிஎஸ்கே பெற்றிருந்தது. இது மிகவும் எளிதான இலக்காகவே டெல்லி அணிக்கு இருந்தது.  டெல்லியி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா 18 (12) ரன்களில் வெளியேறினார்.

பின்பு ஸ்ரேயாஸ் ஐயர் யும் 2 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார். மறுமுனையில் ஷிகர் தவான் பவுண்டரி விளாசி கொண்டிருந்தார். வெறும் 6 ஓவர்களிலேயே 50 ரன்களைக் கடந்தது டெல்லி. ஷிகர் தவான் 39 ரன்களில் வெளியேறினார். பின்பு வந்த வீரர்களும் மலமலவென அவுட் ஆனார்கள் ரிஷப் பண்ட் 15 ரன்களும், ரிபல் படேல் 18 ரன்களும், அஸ்வின் 2 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள். இதனால் டெல்லி அணி 99 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்தது. அடுத்து வந்த சிம்ரான ஹெட்மெயர் பிராவோ வீசிய 3 பந்தில் கேட்ச் கொடுத்தார் ஆனால் ஃபீல்டராக நின்ற சப்ஸ்டியூட் கிருஷ்ணப்பா கவுதம் அதனை தவறவிட்டார்.

இது சென்னை அணியின் வெற்றிவாய்ப்மை மேலும் குறைத்தது. ஆனால் தனது 2ம் வாய்ப்பில் ரன்களைச் சேர்த்து 19.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் டாப்க்குச் சென்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.

Be the first to comment on "ஐபிஎல் 2021: 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி சிஎஸ்கே வை வீழ்த்தி தொடரை வென்றது…"

Leave a comment

Your email address will not be published.