ஐபிஎல் 2021: 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ்யை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்…

www.indcricketnews.com-indian-cricket-news-070

துபாய்: ஐபிஎல் போட்டியின் இரண்டாம் பாகம் முதல் நாளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய  பாஃப் டூப்ளசிஸ் தனது 5 வது பந்திலேயே ரன்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.2வதாக வந்த மொயின் அலி தனது 4 வது பந்திலே டக் அவுட் ஆனார்.

அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் சரிந்தது சற்று ஏமாற்றமாகவே அமைந்தது. அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக களமிறங்கிய சுரேஷ் ரெய்னா தனது முதல் பந்திலேலே பவுண்டரி அடித்தார். ஆனால் ட்ரெண்ட் போல்ட் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்த கடுமையான சூழலில் அணியை காப்பதற்காக 7 வது வீரராக களமிறங்கும் கேப்டன் தோணி 4வதாக களமிறங்கினார் இந்நிகழ்வு அனைவருக்கும் நம்பிக்கையளித்தது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆடம் மில்ன் வீசிய பந்தில் வெறும் 3 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது சென்னை. சொர்ப்ப ரன்களுக்கு அவுட்டான சென்னை அணி நல்ல பார்ட்னர்சிப்காக  காத்துக்கொண்டிருந்தது.

இதையடுத்து களமிறங்கிய ஜடேஜா  தொடக்க வீரரான ருத்ராஜ் உடன்  சரியான நேரத்தில் இணைந்து விளையாட சென்னை அணி மீண்டெழுந்தது. ருத்ராஜ் தனது சிறப்பான ஆட்டத்தால் அரைசதம் அடித்து விளையாடிக் கொண்டிருக்க மறுபக்கம் ஜடேஜாவும் நன்றாக பார்ட்னர்ஷிப் கொடுத்தார். இதனால் அந்த ஜோடி   91 ரன்களை சேர்த்தது. ஆனால்  ஜடேஜா (26) ரன்களில் அவுட் ஆனார். அடுத்துக் களமிறங்கிய டுவைன் பிராவோ கடைசி 2 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 8 பந்துகளில் 3 சிக்ஸர்கள் அடித்து நொறுக்கி 23 ரன்கள் சேர்த்தார் இறுதிவரை களத்தில் இருந்த ருத்ராஸ் (88) ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார்.

20 ஓவர் முடிவில் சென்னை 6 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்து இலக்காக நிர்ணயித்தது. மும்பை அணி சிறப்பாக தனது ஆட்டத்தை துவங்கியது இருப்பினும் சென்னை அணியின் சிறப்பான பெளலிங்கில் விக்கெட்டுகள் மலைபோல் சரிந்தது.

டிகாக் (17), அன்மோல் பிரீத் (16), சூர்ய குமார் யாதவ் (3),இஷான் கிஷான் (11), பொல்லார்ட் (15), குணால் பாண்டியா (4)ரன்களிலும் சரிந்தது. ஆனால் சவுரப்திவாரி தனது அதிரடி ஆட்டத்தால் கடைசி வரை ஆட்டமிழக்காமல் (50) ரன்கள் அடித்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. இதனால் 8-ல் 6 போட்டிகளை வென்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

Be the first to comment on "ஐபிஎல் 2021: 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ்யை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்…"

Leave a comment

Your email address will not be published.