ஐபிஎல் 2021: 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ்யை வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்…

அமீரகம்: ஐபிஎல் போட்டியின் 32வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் பஞ்சாப்ம் 6வது இடத்தில் ராஜஸ்தானும் இருப்பதால் போட்டி நிச்சயம் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பஞ்சாப் அணி டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்து விளையாடியது.

இதையடுத்து களமிறங்கிய தொடக்க வீரர்களான எவின் லூயிஸ் மற்றும் ஜஸ்வால் ஜோடிகள் மிகவும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். பஞ்சாப் அணியில் முகமது ஷமி மட்டுமே கடுமையான நெருக்கடியை உருவாக்கினார். மற்ற பெளலர்களால் அது இயலவில்லை. எவின் லூயிஸ் (36) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் (4) ரன்களில் வெளியேறினார். தொடக்க வீரரான ஜஸ்வால் (49) ரன்களில் அரைசதம் அடிக்க முடியாமல் வெளியேறினார். பின்பு களம் கண்ட மஹிபால் லோமோர் 17 பந்துகளில் (43) ரன்கள் அடித்து மிரள வைத்தார்.

தனது அணியின் ரன்ரேட்டை சிறிது நேரத்தில் தூக்கி நிறுத்திவிட்டார். இருப்பினும் நேரம் செல்ல செல்ல ராஜன்தான் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது பஞ்சாப் அணி. எனவே அடுத்தடுத்து விக்கெட்டுகள் மலைபோல் சரிந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கப்டுகளையும் இழந்து 185 ரன்கள் குவித்திருந்தது ராஜஸ்தான் அணி. இதில் அர்ஷ்தீப் சிங் 5  விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும்  கைப்பற்றினர்.

எனவே  186 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான கே.எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஜோடிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கே.எல் ராகுல் 33 பந்துகளில் (49) ரன்களைக் குவித்தார் இதில் 4 பவுன்ரிகளும் 2 சிக்ஸ்யும் அடங்கும். ஆனால் இவரின் 3 கேட்ச் பந்துக்களை தவறவிட்டது  ராஜஸ்தான் அணி. இது அவர்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியது.

பின்பு தனது 11.5 ஓவரில் வெளியேறினார். மேலும்  மயங்க் அகர்வால் 34 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து தனது அரைசதம் கடந்தார் இறுதியில் 43 பந்துகளில் (67) ரன்கள் குவித்து வெளியேறினார். இந்த ஜோடிகள் இணைந்து 120 ரன்களைப் பெற்றுக் கொடுத்தனர். இது 4வது முறையாகும் இந்த ஜோடி 100 ரன்களை கடப்பது. பின்பு வந்த எய்டன் 20 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆனார்.

இறுதியில் 3 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்  நிக்கோலஸ் பூரன் அவுட் ஆனார். பின்பு வந்த ஹூடா பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட இக்கட்டான நிலையில் ஆகி வெளியேறினார்.  இதனால் 20 ஓவர் முடிவில் 184/4 என்று தோல்வியைத் தழுவியது பஞ்சாப், 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது ராஜஸ்தான் அணி.

Be the first to comment on "ஐபிஎல் 2021: 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ்யை வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்…"

Leave a comment

Your email address will not be published.