ஐபிஎல் 2021: 15.1 ஓவர்களிலேயே மும்பை இந்தியன்ஸ் அணியை அபாரமாக வென்றது கொல்கத்தா அணி…

www.indcricketnews.com-indian-cricket-news-087

அபுதாபி: ஐபிஎல் 2021 இரண்டாம் பாகத்தில் (செப்.23) யில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் போட்டியிட்டது. இதில் டாஸ் வென்றது கொல்கத்தா அணி. முதலில் பேட்டிங்யை தேர்வு செய்தார் அணியின் கேப்டன் மோர்கன். எனவே முதலில் களமிறங்கிய மும்மை இந்தியன் அணியின் தொடக்க ஆட்டக் காரர்களான ரோஷித் ஷர்மா மற்றும் குயின்டன் டி காக் ஜோடிகள் நிதானமாக விளையாடி வந்த நிலையில்  ரோஹித்(30) ரன்களில்  சுனில் நரைன் ஓவரில் அவுட் ஆனார். இதன் பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வெறும் (5) ரன்களில் எட்ஜ் ஆகி வெளியேறினார்.  இதனையடுத்து வந்த இஷான் கிஷான் (14) ரன்களில் அவுட் கேட்ச் கொடுத்து

வெளியேறினார். அணி அடுத்தடுத்து முன்னணி வீரர்களை இழந்த நிலையில் கீரான் பொல்லார்ட் நம்பிக்கை அளித்தார். தொடக்கத்திலேயே சிக்ஸர் பறக்கவிட்டார்   (21) ரன்கள் அடித்தார். உடன் விளையாடிய க்ருனால் பாண்ட்யா (12) ரன்களும் எடுத்து வெளியேறினார்.  இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155  சேர்த்திருந்தனர். 156 ரன்கள் அடித்தால் வெற்றி தனது என்ற நோக்கத்துடன் விளையாட ஆரம்பித்தது கொல்கத்தா அணி. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷீப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் ஜோடி முதல் ஓவர்லேயே 2 சிக்ஸர்களைப் பறக்க விட்டனர்.

இந்நிலையில், கில் (13) ரன்களில் அவுட் ஆனார். ஆனால் வெங்கடேஷ் ஐயர் மும்பை பவுலர்களை திண்டாட வைத்தார். 11 பந்துகளில்  (30) ரன்களை பறக்கவிட்டார். இதில் 3 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும். அசத்தலாக விளையாடிய ஐயர் 25 பந்துகளில் அரைசதம் விளாசி இறுதியில்  30 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து பும்ரா ஓவரில் அவுட் ஆனார். உடன் விளையாடிய ராகுல் திரிபாதியும் தனது அரைசதத்தைப் பதிவு செய்தார். ஆனால் மும்பை அணியால் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில் 15.1 ஓவர்களிலேயே  3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 159 ரன்களைக் குவித்து மகத்தான வெற்றியைப் பெற்றது கொல்கத்தா அணி.  இந்த மாபெரும்  வெற்றியின் மூலம், கொல்கத்தா அதிக ரன் ரேட்டுடன் (+0,36) புள்ளிப் பட்டியலில்  4வது இடத்தைப் பிடித்துள்ளது. 9வது போட்டியில் நான்காவது வெற்றியை பதிவும் செய்துள்ளது.

Be the first to comment on "ஐபிஎல் 2021: 15.1 ஓவர்களிலேயே மும்பை இந்தியன்ஸ் அணியை அபாரமாக வென்றது கொல்கத்தா அணி…"

Leave a comment

Your email address will not be published.


*