ஐபிஎல் 2021 ல் : 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வென்று சென்னை அணி மகத்தான வெற்றி…..

www.indcricketnews.com-indian-cricket-news-008

ஷார்ஜா: ஐபிஎல் 2021 (செப் 30) ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் அணியும் பல பரிட்சை நடத்தினார்கள். இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். எனவே முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரரர்களான சாஹா , ஜேஸன் ராய் விளையாடினார்கள். தீபக் சாஹர் வீசிய 3 ஓவரில் (2 சிக்ஸர்கள்)  விளாசினார்.

மேலும் ஜேஸன் ராய் பச்சன் 4வது ஓவரில் 3வது பந்தில் தோனி பிடித்த கேட்ச்ல் அவுட் ஆகி வெளியேறினார். பிறகு வந்த கேப்டன் கேன் வில்லியம்சன், 11/11 என்ற கணக்கில் பிரவோ ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதன்பிறகு ஹைதராபாத் அணி ரன்களைக் அடிக்க திணறியது.

இடையிடையே ஒன்று அல்லது இரண்டு பந்துகளில் விளையாடி வந்தது. அடுத்து வந்த இளம் வீரர் ப்ரியம் கார்க் 7 ரன்களிலும் , அபிஷேக் ( 18), சமத் (18) ரன்களும் அடித்து வெளியேறினர்கள் . இவ்வாறு 20 ஓவரி இறுதியில் 7 வித்தியாசத்தில 134 ரன்கள் சேர்த்தனார்.  135 எடுத்தால் சென்னை அணி வெற்றி பெறுவது  மட்டுமல்லாமல் ஃப் ளே ஆஃப்பிற்கும் எளிதில் செல்லலாம்.

அதனால் இதில் வெற்றி என்பது மிக முக்கியமாகக் கருதப்பட்டது. சென்னையின் தொடக்க வீரர் டு பிளசிஸ், கெய்க்வாட் ஜோடிகள் 3 ஓவர்களுக்கு 12 ரன்கள் மட்டுமே சேர்த்து மிகவும் நிதானமாக விளையாடி வந்தது. ஆனால் 4வது ஓவரிலிருந்து அதிரடிக் காட்டத் துவங்கியது. அடுத்த 6 ஓவர்க்குன்  45 ரன்கள் குவித்தனர். இந்நிலையில் நன்றாக விளையாடி வந்த  ருத்ராஜ் 45/38  எடுத்து வெளியேறினார்.

பிறகு வந்த மொயீன் அலி மற்றும் டுபிளசில் பார்ட்னர்ஷிப் அமைத்து அமைத்து வந்த நிலையில் மொயின் அலி 17/17 என்ற நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரெய்னா  சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 ரன்னில் எல்பிடபிள்யூ ஆகி அவுட் ஆனார். பின்பு டுபிளசிஸ் யும் சிறப்பாக விளையாடி  41 ரன்களில் கேட்ச் அவுட் ஆனார்.

இறுதியில் வந்த கேப்டன் தோனி (14) ரன்கள் எடுத்து 1 சிக்ஸர் 1 பவுண்டரி பறக்க விட்டு அணியை வெற்றியடைச் செய்தார். இதனால் 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்ப்புக்கு 139 ரன்கள் எடுத்து அதிரடி வெற்றி கண்டு ஃப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை.

Be the first to comment on "ஐபிஎல் 2021 ல் : 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வென்று சென்னை அணி மகத்தான வெற்றி….."

Leave a comment

Your email address will not be published.