ஐபிஎல் 2021 : பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது கடைசி ஓவரில் துல்லியமான பந்து வீச்சால் த்ரில் வெற்றி பெற்றது.

www.indcricketnews.com-indian-cricket-news-024

சார்ஜா: நேற்று அபுதாபியில் நடந்த ஐபிஎல் 2021ல் 52 வது லீக் ஆட்டத்தில் (அக்-6)ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை களத்தில் எதிர்கொண்டது.  விறுவிறுப்பான இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி  அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்து களமிறங்கினார்.

ஐதராபாத் அணியில் ஓபன் பேட்ஸ்மேனாக ஜேசன் ராய் மற்றும் அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். 1 சிக்ஸர் 1 பவுண்டரி என 13 ரன்கள் எடுத்து அபிஷேக் ஷர்மா விக்கெட் இழந்தார். அதற்கு அடுத்தபடியாக கேன் வில்லியம்சன் களம் இறங்கி ஜேசன் ராய் உடன் சேர்ந்து பவர் பிளே முடிவில் 1 விக்கெட்டுக்கு 50 ரன்களை எடுத்தனர். தொடர்ந்து நல்ல ஆட்டத்தை கொடுத்த வில்லியம்சன் 29 பந்துகளுக்கு 31 ரன்களுடன் ஆட்டம் இழந்தார்.

போட்டியை பரபரப்பாக்கிய ஜேசன்ராய் தொடர்ந்து 38 பந்துகளுக்கு 44 ரன்கள்  எடுத்து ஆட்டமிழந்தார் .  ஆர்சிபி  முதலில் ரன்களை வாரி வழங்கினாலும் கடைசி 10 ஓவர்களில் தனது நேர்த்தியான பந்து வீச்சால் ஹர்ஷல் படேல்  4 ஓவர்க்கு 33 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட் களையும் டேனியல் கிறிஸ்டின் 3 ஓவர்க்கு 14 ரன்கள் விட்டுக்கொடுத்து  2 விக்கெட்டுகளையும் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஜார்ஜ் கார்டன் தலா 1 விக்கெட்டையும் ஐதராபாத் அணியிடமிருந்து கைப்பற்றினர்.

அடுத்தடுத்த விக்கெட் இழப்பால் தடுமாறிய ஐதராபாத் அணி 20 ஓவர்க்கு 141 ரன் எடுத்து 7 விக்கெட் இழந்தனர். இதனால் 142 ரன் எடுத்தாலே சுலபமாக வெற்றி பெறலாம் என்று எண்ணி அந்த அணியின் கேப்டன் முதலில் களம் இறங்கினார். புவனேஷ்வர் குமார் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே 5 ரன்களுடன் விராட் கோலி வெளியேறினார்.

கிறிஸ்டின் 1 ரன் பரத் 12 ரன் என ஆட்டம் இழந்து அடுத்தடுத்து வெளியேறினர். இவர்களது விக்கெட்டுக்கு பிறகு களத்தில் இருந்த தொடக்க வீரர்  படிக்கல் க்ளென் மேக்ஸ்வெல் உடன் இணைந்து அதிரடி இன்னிங்ஸ் ஆடி ஆர்சிபி அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மேக்ஸ்வெல் 25 பந்துகளுக்கு 40 ரன்களும் படிக்கல் 52 பந்துகளுக்கு 41 ரன்களும் எடுத்து விக்கெட் இழந்தனர்.

நேரம் ஆக ஆக போட்டியும் மிகவும் பரபரப்பாக சென்றது. கடைசி 2 ஓவரில் 18 பந்துகளுக்கு 29 ரன் தேவைப்பட்டது. 19 வது ஓவரில் ஷாபாஸ் அகமது 14 ரன்கள் எடுத்த போது விக்கெட் இழந்தார். ஆர் சிபி அணியின் வெற்றிக்கு 20 வது ஓவரில் 6 பந்துகளில் 13 ரன் தேவைப்பட்டது.

வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் 20வது ஓவரில் வீசிய 4வது பந்தை களத்தில் இருந்த டிவில்லியர்ஸ் சிக்ஸர் அடித்து மிரட்டனார். 2 பந்துக்கு 6 ரன் தேவைப்பட்டது. இறுதிவரை மிகவும் பரபரப்பாக போன இந்த போட்டி வெறும்  4 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியால் அதிரடியாக வெற்றி பெற்றது.

Be the first to comment on "ஐபிஎல் 2021 : பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது கடைசி ஓவரில் துல்லியமான பந்து வீச்சால் த்ரில் வெற்றி பெற்றது."

Leave a comment

Your email address will not be published.