ஐபிஎல் 2021 : பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ப்ளே ஆஃப் க்குள் சென்றது ஆர்சிபி அணி….

www.indcricketnews.com-indian-cricket-news-002

சார்ஜா: ஐபிஎல் 2021ல் 48வது லீக் ஆட்டத்தில் (அக்-3)ல் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் ஆர்சிபி அணிகள் அனல் பறக்க மோதிக்கொண்டது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி  அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக முடிவெடுத்து ஓப்பனிங் வீரராக களமிறங்கினார்.

இவருடன்  மறுமுனையில் தேவ்தத் பட்டிக்கல் யும்  விளையாடினார். இருவரும் இணைந்து அதிரடியான பார்ட்னர்ஷிப் அமைத்து, விளையாடி பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை விளாசினார்கள். எனவே முதல் விக்கெட் இலப்பில் இந்த ஜோடி  68 ரன்கள் அடித்திருந்தார்கள். கோலி (25), பட்டிகல் (40) ரன்கள் அடித்திருந்தனர்.  ஆனால் அடுத்து வந்த டேன் கிளிஸ்டியன் வந்ததும் அவுட் ஆகி வெளியேறினார்.

இதன் பின்பு வந்த க்ளென் மேக்ஸ்  மற்றும் டிவில்லியர்ஸ் இனணந்து (57) ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை தூக்கி நிறுத்தினர். டிவில்லியர்ஸ் 18 பந்துகளில் (23) ரன்கள் அடித்து விளாசினார். அடுத்து வந்த ஹாபாஷ் அகமது (8) ரன்கள் மட்டும்  எடுத்து ஆட்டத்தின் இறுதியில்  20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை விளாசி எதிரணிக்கு 165 ரன்கள்  எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிறுத்தியது. நடுத்தரமான இலக்கு என்பதால் பஞ்சாப் அணி சற்று வேகமாகவே விளையாட திட்டமிட்டது.

அதையடுத்து களம் கண்ட பஞ்சாப் அணி ஆட்டம் முதலே மிரட்டியது. தொடக்க வீரர்களான கேப்டன் கே .எல். ராகுல் (39) ரன்களும்  மற்றும் மயங்க் அகர்வால் 57/ 42  ரன்களும் தெரிக்க விட்டு முதல் விக்கெட்டிற்கே 91 ரன்களை சேர்த்து நல்ல அடித்தளத்தை அணிக்கு அமைத்துக் கொடுத்தனர்.  ஆனால் இந்த அணியிலும் அடுத்து வந்த யாரும் நிலைத்து ஆடவில்லை. நிகோலஸ் பூரண் (3) ரன்களிலும், மார்க்ரம் (20) ரன்களிலும், சர்ஃபராஸ் கான் 0/1  யும், ஷாருக்கான் 16/11  என அடுத்தடுத்து மிகக் குறைந்த  ரன்களையே பதிவு செய்தனர். 

இது இரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்திருந்தாலும் இதுவே பஞ்சாப் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை மட்டுமே சேர்த்திருந்ததால்    6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி தொடரை  வென்று ப்ளே ஆஃப் பில் காலடி பதித்தனர்.  விறுவிறுப்பாகக் சென்ற இத்தொடரில் மேலும்  ப்ளே ஆஃப் க்குச் செல்லும் 3வது சிறந்த அணியாக அட்டவணையில் இடம் பெற்றுள்ளது ராஜஸ்தால் ராயல் சேலஞ்சர்ஸ் அணி.

Be the first to comment on "ஐபிஎல் 2021 : பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ப்ளே ஆஃப் க்குள் சென்றது ஆர்சிபி அணி…."

Leave a comment

Your email address will not be published.