ஐபிஎல் 14ஆவது சீசன் 23ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

Chennai super kings beat sunrises hyderabad by 7 wickets
Chennai super kings beat sunrises hyderabad by 7 wickets

ஐபிஎல் 14ஆவது சீசன் 23ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டேவிட் வார்னரும் ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர். வழக்கமாக துவக்க ஓவர்களில் அதிரடி காட்டும் பெர்ஸ்டோவ் இன்றைய ஆட்டத்தில் ஏமாற்றம் தந்தார். ஆட்டத்தின் நான்காவது ஓவரிலேயே வெறும் 7 ரன்களுக்கு சாம் கரன் பந்தில் அவர் வெளியேறினார். பின்னர் மணிஷ் பாண்டே டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி மேற்படி விக்கெட்டை இழக்காமல் நிதானமாகவும், தேவையான நேரத்தில் பவுண்டரி அடித்தும் விளையாடிது. இதனால் ஸ்கோர் 100 ரன்களைக் கடந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. 55 பந்துகளில் 57 ரன்கள் எடுத்திருந்த டேவிட் வார்னர் லுங்கி ஏங்கிடி பந்தில் வெளியேறினார். சிறிது நேரத்திலேயே மணிஷ் பாண்டேவும் 61 ரன்களுக்கு ஏங்கிடி பந்தில் ஆட்டமிழந்தார். இவர்கள் நிலைத்து நின்று விளையாடியும் கடைசி நேரத்தில் அதிரடி காட்டத் தவறியதால் அணியின் ரன் ரேட் உயரவில்லை.

கடைசி நேரத்தில் கேன் வில்லியம்சன் அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 26 ரன்கள் எடுத்ததால் அணியின் ஸ்கோர் 16 ரன்களைக் கடந்தது. இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. சென்னை அணிக்கு 172 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலக்கை துரத்திய சிஎஸ்கேவில் ஓபனர்கள் ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளஸி இருவரும் சிறப்பான துவக்கம் தந்தனர். 100 ரன்களை கடந்த இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் திணறினர். இறுதியில் ரஷித் கான் வீசிய பந்தில் ருதுராஜ் 75 (44), டு பிளஸி 56 (38) இருவரும் ஆட்டமிந்தார்கள். தொடர்ந்து மொயின் அலி 15 (8) விக்கெட்டையும் ரஷித் எடுத்துக் கொடுத்தார். இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நெருக்கடி உண்டாக்க முடியவில்லை. இறுதியில் சுரேஷ் ரெய்னா 17* (15), ஜடேஜா 7* (6) இருவரும் சேர்ந்து அணியை வெற்றிப்பாதை நோக்கி அழைத்துச் சென்றனர். இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Be the first to comment on "ஐபிஎல் 14ஆவது சீசன் 23ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின."

Leave a comment

Your email address will not be published.


*