ஐபிஎல்: பலம் வாய்ந்த டெல்லி அணியை வீழ்த்தியது பஞ்சாப்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 38-வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. துபாயில் நடைபெற்ற இந்தப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய டெல்லி அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணியில் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 61 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை துவக்கிய பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து வெற்றியை பதிவு செய்தது.

டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளார். ஷிகர் தவான் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த நிலையில், நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்திலும் சதம் அடித்து அசத்தினார்.

அடுத்தடுத்து சதம் அடித்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்து இரு சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் பெற்றுள்ளார். அதேபோல், ஒரு ஐபில் தொடரில் ஒன்றுக்கும் மேற்பட்ட சதம் அடிக்கும் 2-வது இந்திய வீரர் என்ற பெருமையும் ஷிகர் தவான் பெற்றுள்ளார். ஒரு ஐபிஎல் தொடரில் 4 சதங்களை விராட் கோலி விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

7 போட்டிகளில் 1 வெற்றி மட்டுமே பெற்று பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. ஆனால், அடுத்த மூன்று போட்டிகளில் அந்த அணி வென்று தற்போது 10 போட்டிகளில் 4 வெற்றிகள் பெற்று வேகமாக ஐந்தாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது இதில் முக்கியமான விஷயம் அந்த அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் புள்ளிப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் அணிகளை வீழ்த்தி உள்ளது. பெங்களூர் அணியை வீழ்த்திய பஞ்சாப், அடுத்து மும்பை அணியை சூப்பர் ஓவர் வரை சென்று வீழ்த்தியது.அடுத்து புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த டெல்லி அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது. டெல்லி போட்டியில் 165 ரன்களை அந்த அணி சேஸிங் செய்தது. அதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாப் 3 அணிகளை வீழ்த்தியதன் மூலம் பஞ்சாப் அணி மற்ற அணிகளுக்கு தாங்கள் பெரும் அச்சுறுத்தலாக அமைவோம் என்பதை உணர்த்தி உள்ளது.

Be the first to comment on "ஐபிஎல்: பலம் வாய்ந்த டெல்லி அணியை வீழ்த்தியது பஞ்சாப்"

Leave a comment

Your email address will not be published.