ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்: ட்ரீம் 11 நிறுவனத்துக்கு அடித்தது அதிர்ஷ்டம்!!

ஐபில் தொடரை ஸ்பான்சர் செய்யப் பல நிறுவனங்கள் முட்டிமோதிக் கொண்டிருந்த நிலையில், “ட்ரீம் 11” நிறுவனத்திற்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அத்துடன் டாடா, பைஜூ நிறுவனங்களும் ஐபிஎல் பார்ட்னர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் குறைந்தபட்சம் 300 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்கலாம் என்று கடந்த வாரம் பிசிசிஐ அறிவித்திருந்தது. ட்ரீம் லெவன், அமேசான், பைஜூ, பதஞ்தசலி, ஜயோ, டாடா எனப் பல நிறுவனங்கள் இதற்காகப் போட்டிப் போடுவதாகத் தகவல் வெளியானது. ஆனால், பைஜூவுக்கும், டிரிம் லெவனுக்கும் இடையில்தான் கடும் போட்டி நிலவுகிறது என்று கூறப்பட்டது.

இந்நிலையில், கொரோனா காலத்தில் மக்களுக்காகப் பணத்தை வாரி வழங்கிய டாடா நிறுவனம், ஏற்கனவே, ஐபிஎல் பார்ட்னராக இருக்கும் ட்ரீம் 11 மற்றும் இந்திய அணிக்கு ஜெர்சி ஸ்பாரன்சராக இருந்த பைஜூ நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

டைட்டில் ஸ்பான்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள ட்ரீம் 11 நிறுவனம் 222 கோடி ரூபாயும், பார்ன்ட்னர்களாக இருக்கக் கூடிய டாடா 180 கோடி ரூபாய் மற்றும் பைஜூ 125 கோடி ரூபாய் இந்த வருடம் பிசிசிஐக்கு அளிக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ட்ரீம் 11 மற்றும் பைஜூ நிறுவனம் ஏற்கெனவே கிரிக்கெட் போட்டிகளுக்கு ஸ்பான்சர்களாக இருந்துள்ளன. இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக பைஜூ நிறுவனம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

டாடா நிறுவனம் ஏலத்தில் பங்கேற்ற விருப்பம் தெரிவித்துள்ளது என ஆகஸ்ட் 14ஆம் தேதி செய்திகள் வெளியாகின. இந்தியாவில் கொரோனா பரவத்தொடங்கிய காலத்தில், மத்திய, மாநில அரசுகளின் நிதி நெருக்கடிகளைச் சமாளிக்க டாடா நிறுவனம் 1,500 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கியது. எனது சொத்துகளை மொத்தமாக விற்றாவது இந்திய மக்களைக் காப்பாற்றுவேன் என்று டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா கூறியிருந்தார்.

இவரின் கொடை உள்ளம் கொண்ட உள்ளத்தைப் பாராட்டி பலர் டாடா பொருட்களை மட்டுமே இனி பயன்படுத்துவேன் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்கள். இந்நிலையில், கோடிக்கணக்கானமக்களின் அன்பை பெற்ற டாடா நிறுவனத்திற்கு ஸ்பான்சர் கிடைக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.

இதற்குமுன் ஸ்பான்சராக இருந்த சீனாவின் விவோ நிறுவனத்தால் பிசிசிஐக்கு ஆண்டுக்கு 440 கோடி விதம் 2018–2022 வரை செலுத்த வேண்டும் என ஒப்பந்தம் இருந்தது. தற்போது, இந்த இழப்பை ஈடுசெய்ய புதிய வழியை பிசிசிஐ கண்டுபிடித்துள்ளதாக கூறியிருந்தது. ஒரு ஸ்பான்சரையும், இரண்டு நிறுவனங்களை முக்கிய பாட்னர்களாக சேர்த்துக்கொண்டு கொரோனாவால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட, பிசிசிஐ முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது

Be the first to comment on "ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்: ட்ரீம் 11 நிறுவனத்துக்கு அடித்தது அதிர்ஷ்டம்!!"

Leave a comment

Your email address will not be published.


*