ஐபிஎல் டி20 கிரிக்கெட்: 2-வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்

டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி களமிறங்கிய மும்பை அணியின் சார்பில் ரோகித் சர்மா மற்றும் டி காக் ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர், இந்த ஜோடியில் ரோகித் சர்மா 9(8) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் (0) ரன் ஏதும் எடுக்காமலும், இஷான் கிஷான் 7(7) ரன்களும், அடுத்து களமிறங்கி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்ணால் பாண்ட்யா 34(30) ரன்களும் எடுத்து வெளியேறினார்.
இறுதியில் அதிரடி காட்டிய பொல்லார்டு 34(12) ரன்களும், கெளல்டர் நைல் 24(12) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும் கே.எல் ராகுலும் களம் இறங்கினர். மயங்க் அகர்வால் 11 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். கே.எல் ராகுல், பும்ரா பந்தில் போல்டு ஆகி ஆட்டம் இழந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 8 ரன்கள் மட்டுமே பஞ்சாப் அணி எடுத்தது. இதனால், ஆட்டம் டிரா ஆனது.

இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பும்ராவின் துல்லிய பந்து வீச்சால் ரன்களை சேர்க்க முடியாமல் திணறியது. 2 விக்கெட்டுகளை இழந்து வெறும் 5 ரன்களை மட்டுமே பஞ்சாப் அணி சூப்பர் ஓவரில் சேர்த்தது. ரோகித் சர்மா – டிகாக் கூட்டணி 6 ரன்களை எடுக்க முடியால் 5 ரன்களை மட்டுமே சூப்பர் ஓவரில் சேர்த்தது. இதனால், மீண்டும் ஆட்டம் டிரா ஆனது.

மும்பை அணி சூப்பர் ஓவரில் 11 ரன்களை சேர்த்தது. இதையடுத்து, 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. மும்பை அணி சார்பில் பவுல்ட் சூப்பர் ஓவரை வீசினார். பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயிலும் மயங்க் அகர்வாலும் களம் இறங்கினர். முதல் பந்தை எதிர்கொண்ட கிறிஸ் கெயில் சிக்சருக்கு விளாசினார். 2-வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 3 வது மற்றும் 4 பந்தில் பவுண்டரியை விளாசிய மயங்க் அகர்வால் பஞ்சாப் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.

Be the first to comment on "ஐபிஎல் டி20 கிரிக்கெட்: 2-வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்"

Leave a comment

Your email address will not be published.