ஐபிஎல்: குயிண்டன் டி காக் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணியை வீழ்த்திய லக்னோ அணி ஹாட்ரிக் வெற்றியை ருசித்தது.

www.indcricketnews.com-indian-cricket-news-032

மும்பை: ஐபிஎல் தொடரின் 15வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் நேற்று மும்பையிலுள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் பலப்பரிட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீசசை தேர்வு செய்தது.

இதனைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ப்ரத்வி ஷா காட்டி அடிக்க, டேவிட் வார்னர் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. இதில் தொடக்கம்முதலே அதிரடியான ஆட்டத்தை விளையாடி அரைசதம் விளாசிய ப்ரத்வி ஷா 9 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 61(34) ரன்கள் எடுத்தபோது கிருஷ்ணப்ப கௌதம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஆனால் 4(12) ரன்கள் மட்டுமே அடித்த தொடக்க வீரரான வார்னர் பிஷ்னோய் வீசிய 8வது ஓவரில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் தொடர்ந்து களமிறங்கிய ரௌமேன் பௌல் 13(10) ரன்கள் மட்டும் சேர்த்து பிஷ்னோய் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.

இந்நிலையில் அடுத்தடுத்த விக்கெட் இழப்புகளால் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த கேப்டனும்,விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் மற்றும் சர்ஃபராஸ் கான் அகிய இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவிக்க முயற்சித்தனர். ஆனால் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால்,  ரிஷப் பந்த் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 39(36) ரன்களும், சர்ஃபராஸ் கான் 3 பவுண்டரி உட்பட 36(28) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்தனர்.

இதனால் டெல்லி அணி 20 ஓவருக்கு 3 விக்கெட் இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து எளிதான இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் கே.எல்.ராகுல்-விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் ஜோடியில் குலீதீப் யாதவ் வீசிய 9வது ஓவரில் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசிய ராகுல் 24(25) ரன்களுடனும் ,அடுத்துவந்த எவின் லீவிஸ் 5(13) ரன்கள் எடுத்து லலித் யாதவ் பந்துவீச்சிலும் பெரிய ஸ்கோர் எதுவும் அடிக்காமல் ஆட்டுமிழந்தனர். 

இதனைத்தொடர்ந்து  நீண்டநேரம் களத்திலிருந்து சிறப்பாக விளையாடிய தொடக்கவீரரான குயின்டன் டி காக் அணியை வெற்றிப்பாதை நோக்கி அழைத்துச் சென்றார். இந்நிலையில் அரைசதம் விளாசிய டி காக் 9 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 80(52) ரன்கள் எடுத்தபோது குல்தீப் யாதவ் வீசிய 15வது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த தீபக் ஹூடா 11(13) ரன்கள் எடுத்து பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக களமிறங்கிய க்ருணல் பாண்டியா 19(14) ரன்களுடனும், ஆயுஷ் பதோனி 10(3) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தனர். இதனால் லக்னோ அணி 19.4 ஓவருக்கு 4 விக்கெட் இழந்து 155 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றிபெற்றது.

Be the first to comment on "ஐபிஎல்: குயிண்டன் டி காக் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணியை வீழ்த்திய லக்னோ அணி ஹாட்ரிக் வெற்றியை ருசித்தது."

Leave a comment

Your email address will not be published.


*