ஐபிஎல் அரங்கில் டெத் பவுலிங்கில் நாங்கதான் பெஸ்ட்: டேவிட் வார்னர்!

புதுடெல்லி: ஐபில் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளில் டெத் ஓவர்களில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தான் பெஸ்ட் என அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 இல் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்ல இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், ஆப்கான் சுழற்பந்துவீச்சாளர் ரசித் கான் மிக முக்கியம் காரணமாக இருந்தனர்.

சிறந்த அணி
இதற்கிடையில் சன்ரைசர்ஸ் வீரர் ஜானி பேர்ஸ்டோவுடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் கேப்டன் டேவிட் வார்னர் பேசினார். அப்போது வார்னர் கூறுகையில்,“எங்கள் அணி மிகவும் சிறப்பான அணி. எங்கள் அணியில் மிகச்சிறப்பான விஷயம் என்றால், பவுலிங்கில் நல்ல டெப்த் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளில் சிறந்த சுவிங் பவுலிங் மற்றும் அசத்தலான டெத் பவுலிங் ஹைதராபாத் அணியில் தான் உள்ளது” என்றார்.

சிறந்த பேட்டிங் கூட்டணி
கடந்த 2014 முதல் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவுடன் கூட்டணி சேர்ந்து வார்னர் துவக்கத்தில் ஹைதராபாத் அணிக்காக அசத்தி வருகிறார். இந்த ஜோடி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 185 ரன்கள் சேர்த்து அசத்தியது. இந்த ஜோடியின் வெற்றி குறித்து பேர்ஸ்டோவ் கூறுகையில்,“இருவருக்கும் இடையே நல்ல புரிதல் உள்ளது. 2 ரன்கள் எடுக்க வாய்ப்பு இருந்தால் இருவரும் கொஞ்சம் கூட யோசித்தது இல்லை. எதிரணிக்கு இப்படி நெருக்கடி அளிக்கும் போது, நமக்கு உள்ள நெருக்கடி பாதியாக குறைந்து விடும்” என்றார்.

Be the first to comment on "ஐபிஎல் அரங்கில் டெத் பவுலிங்கில் நாங்கதான் பெஸ்ட்: டேவிட் வார்னர்!"

Leave a comment

Your email address will not be published.


*