ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையை வெளியிட்டுள்ளது: சிராஜ் மற்றும் ராகுல் முன்னேறியுள்ளனர்…

www.indcricketnews.com-indian-cricket-news-069

சர்வதேச கிரிக்கெட்கவுன்சில் நேற்று வெளியி்ட்ட டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலி்ல் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலிடத்தை நெருங்கியிருக்கிறார். லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் (180 ) ரன்கள் சேர்த்து ரூட் ஆட்டமிழக்காமல் இருந்தார், முதல் டெஸ்டிலும் ரூட் சதம் அடித்திருந்தார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கும் முன் 5-வது இடத்தில் இருந்த ரூட் தற்போது 2-வது இடத்துக்கு (893) புள்ளிகளுடன் தற்போது முன்னேறியிருக்கிறார். நியூஸிலாந்து அணியின்  கேப்டன் வில்லியம்ஸன் (901) புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் கோலி எந்தவித முன்னேற்றமின்றி தொடர்ந்து 5-வது இடத்திலேயே 776 புள்ளிகளுடன் இருந்து வருகிறார்.

773 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா 6-வது இடத்திலும் உள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக சதம் அடித்த கே.எல்.ராகுல் 19 இடங்கள் முன்னேறி தற்பொழுது 37-வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு நவம்பரில் ராகுல் அதிகபட்சமாக 8-வது இடம்வரை வந்திருக்கிறார்.பந்துவீச்சாளர்களில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆன்டர்ஸன் 2-வது டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதால், ஒரு படி முன்னேறி, தற்போது நகர்ந்து 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

மார்க்உட் 37-வது இடத்திலும், 2-வது டெஸ்டில் 8 வி்க்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் சிராஜ் 18 இடங்கள் நகர்ந்து தற்போது 38-வது இடத்தைப் பிடித்துள்ளார்.பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் 2 இடங்கள் முன்னேறி 8 வது இடத்துக்கும், பஹீம் அஷ்ரம், 48-வது இடத்துக்கும் பவாத் ஆலம் 55-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். மே.இ.தீவுகள் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை முதல் டெஸ்டில் வென்றதால், இதில் மே.இ.தீவுகள் வீரர் பிளாக்வுட் 9 இடங்கள் நகர்ந்து 35-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆல்ரவுண்டர் ஹேஸன் ஹோல்டர் 5 இடங்கள் நகர்ந்து 414 புள்ளிகளுடன் முதலிடத்தை வசப்படுத்தியுள்ளார். பிராத்வெய்ட் 18 இடங்கள் நகர்ந்து 45-வது இடத்தில் உள்ளார். வேகப்பந்துவீச்சாளர் சீலஸ் 58வது இடத்திலும் ஆட்டநாயகன் விருது வென்ற ரோச் 11-வது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சாளர்களில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆன்டர்ஸன் 2-வது டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதையடுத்து, ஒரு இடங்கள் நகர்ந்து 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மார்க்உட் 37-வது இடத்திலும், 2-வது டெஸ்டில் 8 வி்க்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்சிராஜ் 18 இடங்கள்நகர்ந்து 38-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளார். பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் 2 இடங்கள் முன்னேறி 8வது இடத்துக்கும், பஹீம் அஷ்ரம், 48-வது இடத்துக்கும் பவாத் ஆலம் 55-வது இடத்துக்கும் நகர்ந்துள்ளனர்.

Be the first to comment on "ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையை வெளியிட்டுள்ளது: சிராஜ் மற்றும் ராகுல் முன்னேறியுள்ளனர்…"

Leave a comment

Your email address will not be published.


*