ஐசிசி டி20 ரேங்கிங் பட்டியல் வெளியீடு 10-வது இடத்திற்கு சரிந்தார் விராட் கோலி: கேஎல் ராகுல் 2-வது இடத்தில் நீடிக்கிறார்

ஐசிசி சர்வதேச டி20 போட்டிகளின் தற்போதைய தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளிவிட்டு தொடர்ந்து கே.எல்.ராகுல் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.இந்த பட்டியலில் 9வது இடத்தில் இருந்த கேப்டன் விராட் கோலி தற்போது 10வது இடத்திற்கு கீழே தள்ளப்பட்டுள்ளார். அவரது இடத்திற்கு இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் தற்போது முன்னேறியுள்ளார்.இந்த பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்துவரும் நிலையில், அடுத்ததாக இந்திய துவக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல், மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளனர்.அசோக்.. ஸாரி.. ரசிகர்களே.. நல்லா குறிச்சு வச்சுக்கங்க.. இனிமேல் இப்படித்தான் நடக்கும்..

கங்குலி!   சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகள், அதில் பங்கேற்கும் வீரர்கள் ஆகியவற்றை கணக்கில்கொண்டு அவ்வப்போது ஐசிசி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படுகிறது. இதன்மூலம் சர்வதேச அளவில் வீரர்களின் முன்னிலை விவரங்களை, அவர்களின் விளையாட்டு ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும். இந்நிலையில் ஐசிசி டி20 போட்டிகளின் தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.  இந்த பட்டியலில் தொடர்ந்து தனது இரண்டாவது இடத்தை இந்திய துவக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் தக்க வைத்துக் கொண்டுள்ளார். நியூசிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், முதலில் ஆடிய சர்வதேச டி20 தொடரில் 5 போட்டிகளிலும் வெற்றி கொண்டு, அந்த அணியை ஒயிட்வாஷ் செய்தது. 
 

டி20 கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 10-வது இடத்திற்கு சரிந்துள்ளார். இதற்கு முன் 9-வது இடத்தில் இருந்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் மோர்கன் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி 10-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
கேஎல் ராகுல் 823 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறார். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 879 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். ஆரோன் பிஞ்ச் 3-வது இடத்திலும், கொலின் முன்றோ 4-வது இடத்திலும், மேக்ஸ்வெல் 5-வது இடத்திலும், தாவித் மலன் 6-வது இடத்திலும், எவின் லீவிஸ் 7-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரதுல்லா 8-வது இடத்திலும் உள்ளனர்.பந்து வீச்சு தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் எந்தவொரு இந்திய பந்து வீச்சாளர்களும் இல்லை. முதல் 10 இடங்களில் 9-வது இடங்களை சுழற்பந்து வீச்சாளர்கள் பிடித்துள்ளனர்.  

Be the first to comment on "ஐசிசி டி20 ரேங்கிங் பட்டியல் வெளியீடு 10-வது இடத்திற்கு சரிந்தார் விராட் கோலி: கேஎல் ராகுல் 2-வது இடத்தில் நீடிக்கிறார்"

Leave a comment

Your email address will not be published.


*