ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி 18வது ஓவரிலேயே இந்திய அணி நிர்ணயித்த 152 ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

www.indcricketnews.com-indian-cricket-news-082

அமீரகம்: டி 20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டியில்  குரூப்-2ல் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த ஆட்டம் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்  நடைப்பெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஷம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணியின்  தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல்-  ரோஹித் சர்மா ஜோடி களமிறங்கினர். இதில் ஷஹீன் அப்ரிடிவின் முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் ரோஹித் சர்மா  எல்.பி.டபுள்.யுவாகி ஆட்டமிழந்தார். அதே ஷஹீன் அப்ரிடிவின் வீசிய மூன்றாவது ஓவரில் 3 ரன்களுடன் கே.எல்.ராகுலும் ஆட்டமிழந்தார்.

4-வதாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 1 சிக்ஸர்,1 பவுண்டரி உட்பட 11 ரன்கள் எடுத்து 6வது ஓவரில் ஹசன் அலி வீசிய பந்தில் விக்கெட் கீப்பரின் கேட்ச்சில்  ஆட்டமிழந்தார்.  பவர் பிளேவில் 6 ஓவர்களில் 36 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. அடுத்ததாக களமிறங்கிய ரிஷப் பந்த் 13 வது ஓவரில் 2 பவுண்டரி 2 சிக்ஸர் உட்பட 39(30)ரன்களில் ஷதாப் கான் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

   விராட்கோலி-ரிஷப்பந்த் ஜோடி 38 பந்தில் 50 ரன்களை குவித்தது.இதை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா 13(13) ரன்களுடன் ஆட்டமிழந்தார் மறுபுறம் விளையாடிய கேப்டன் கோலி  5 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 57(49) ரன்களுடன் ஷஹீன்  அப்ரிடி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.  20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு இந்திய அணி 151 ரன்கள் எடுத்தது.  பாகிஸ்தான் அணியின் ஷஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும் ஹசன் அலி 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

அடுத்ததாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி 152 ரன்களை இலக்காக கொண்டு தொடக்க ஆட்டக்காரர்களான பாபர் ஆஷம் மற்றும் முகமது  ரிஷ்வான் ஜோடியில்  அசாம்  6 பவுண்டரி 2 சிக்ஸர்  68 (52)ரன்களுடனும், ரிஷ்வான்  6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 79(55) ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இந்திய வீரர்களின் பவுலிங்கை தெறிக்கவிட்டனர். பவர்பிளேவில் 43 ரன்களுக்கு விக்கெட் இழக்காமல் இருந்தது.

3 ஓவர்களில் 17 ரன்கள்  தேவைப்பட்ட நிலையில் ஷமி வீசிய ஓவரிலேயே 1சிக்ஸர் 2 பவுண்டரி என 17.5 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து உலகக் கோப்பை வரலாற்றிலியே  முதன்முறையாக அபார வெற்றி பெற்று வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது.

Be the first to comment on "ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி 18வது ஓவரிலேயே இந்திய அணி நிர்ணயித்த 152 ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது."

Leave a comment

Your email address will not be published.