ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் 3 முக்கிய காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தானிடம் வீழ்ச்சியடைந்தது.

www.indcricketnews.com-indian-cricket-news-089

துபாயில் நடைபெற்ற சர்வதேச உலகக் கோப்பை தொடரில் உலகக் கோப்பை வரலாற்றிலியே முதன்முறையாக இந்திய அணியை தோற்கடித்து பாகிஸ்தான் சாதித்துள்ளது. இந்திய அணி 20 ஓவருக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் பாபர் ஆஷம் – முகமது ரிஸ்வான் ஜோடியின் அதிரடியாக பேட்டிங்கில்  152 ரன்கள் எடுத்து  10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பெறச் செய்தனர். இந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைய முக்கிய காரணங்களாக இருந்தவைகள்,

 டாஸ் மிகவும் முக்கியமான ஒன்று. ஐபிஎல் 2020 மற்றும் 2021 ஆகிய தொடர்களில் சேஸிங் செய்த அணிகளே 77 சதவீதம் வெற்றிவாகை சூடியுள்ளது. ஞாயிறு நடந்த போட்டியில் விராட் கோலியும் முதலில் பந்துவீச்சையே விரும்பினார். பாகிஸ்தானுக்கு பெரிய இலக்கை நிர்ணயக்க முடியாமல்  சிறந்த பேட்டர்களான ரோஹித் சர்மா ராகுல் சூர்யகுமார் யாதவ் அதிக ரன் எடுக்காமல் அடுத்தடுத்து வெளியேறினர். பவர் பிளேவில் 36 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து திணறியது.

அடுத்ததாக  3 வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தும் பாபர் ஆஷம் -முகமது ரிஷ்வான் ஜோடியை வெளியேற்ற முடியாமல் திணிறினார்கள். பாகிஸ்தான் அணி பவர் ப்ளேவில் 43 ரன்கள் எடுத்து விக்கெட் இழக்கவில்லை. 

இந்திய அணி சுழற்பந்து வீச்சிலும் கோட்டை விட்டது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு  18 விக்கெட்களை வீழ்த்திய வருண் சக்ரவர்த்தி மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் இந்ந போட்டியில் சோபிக்கவில்லை.  கடைசி 8 ஓவர்களில் 67 ரன்கள் பாகிஸ்தானுக்கு தேவைப்பட்ட நிலையில்  ரன்ரேட்டும் 8-க்கு மேல் இருந்தும் கூட பாகிஸ்தானுக்கு இந்திய பவுலர்கள் யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் முதல் வேகப்பந்து வீச்சாளர்கள் வரை அனைவரும்  ஷாட் பால்களை வீச பாகிஸ்தான் பவுண்டரிக்கு அனுப்பியது. ஷாட் பால் போட்டே பாகிஸ்தானை வெற்றி பெற செய்தனர்.

அடுத்து வலுவான இந்திய அணியை அனுபவம் வாய்ந்த  அஸ்வின் போன்ற வீரர்கள் கொண்டு தேர்வு செய்யாமல் போனதும் இந்த தோல்விக்கு மிக முக்கிய காரணம். உடல் தகுதி காரணமாக ஹர்திக் பாண்டியா பந்துவீசுவும் இல்லை ஃபார்மும் சமீபத்தில் மிக சிறப்பாக இல்லை . ஒரு சிறந்த ஹிட்டர்ராக இஷான் கிஷானை தேர்வு செய்து களமிறக்கியிருக்கலாம். ஐபிஎல் தொடரில் இஷான் கிஷான் ஹர்திக் பாண்டியாவை விட மிக சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடதக்கது.

Be the first to comment on "ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் 3 முக்கிய காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தானிடம் வீழ்ச்சியடைந்தது."

Leave a comment

Your email address will not be published.